மலச்சிக்கல் என்பது அனைத்து வயதினரையும் பாதிக்கும் பொதுவான செரிமான பிரச்சனைகளில் ஒன்றாகும். மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் அதிகரித்த உட்கார்ந்த வாழ்க்கை முறையின் காரணமாக உலகளவில் அதிகமான மக்கள் இந்த நோயை எதிர்கொள்கின்றனர்.
மலம் கழிப்பதில் கடினம் இருந்தால், நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதற்கு உணவுமுறை மாற்றங்கள் உதவியாக இருக்கும் அதே வேளையில், இதை சமாளிக்க உடல் செயல்பாடு மிகவும் அவசியம். இவற்றில் யோகா, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, மேலும் மலம் அல்லது வாயுவை வெளியேற்ற செரிமான மண்டலத்தை ஊக்குவிக்கிறது.
பிரபல யோகா டிரெயினர் அன்ஷுகா பர்வானி, மலச்சிக்கலை சமாளிக்க உதவும் யோகாசனங்களை செய்து காட்டினார்.
நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசத்தால் அவதிப்படுகிறீர்களா? மலச்சிக்கல் அடிக்கடி உடலில் வாயு அடைப்புக்கு வழிவகுக்கும்.
சில யோகா முத்திரைகள் இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க உங்களுக்கு உதவும். இந்த கை முத்திரைகள் உடலில் ஆற்றலின் கீழ்நோக்கி இயக்கத்தை செயல்படுத்துவதால் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.
அவை நச்சுகளை அகற்றுவதை ஊக்குவிப்பதன் மூலம் உடலை நச்சுத்தன்மை நீக்க உதவி செரிமான பிரச்சினைகளுக்கு உதவுகின்றன, என்று அன்ஷுகா கூறினார்.
மலச்சிக்கலை போக்க நீங்கள் பயிற்சி செய்யக்கூடிய சில யோகா முத்திரைகள் இங்கே:
வாயு முத்திரை
சமஸ்கிருத மொழியில் வாயு என்றால் காற்று என்று அர்த்தம்.
ஆயுர்வேதத்தின் படி, காற்று நம் உடலில் உள்ள வாத தோஷத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வாயு முத்திரை என்பது உடலில் உள்ள காற்றை சமன் செய்கிறது.
இதை பயிற்சி செய்வதன் மூலம், நம் உடலில் உள்ள காற்றின் ஏற்ற தாழ்வுகளை சமன் செய்யலாம், அதன் மூலம் வாயு, அஜீரணம் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற இரைப்பை பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம், என்று ஃபிட்னெஸ் கோச் ஜிக்யாசா குப்தா விளக்கினார்.
அபான முத்திரை
உடலில் தேங்கியுள்ள நச்சுககளால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அபான வாயு முத்திரை, வயிற்றில் உள்ள தேவையில்லாத நச்சுககளை வெளியேற்றி நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
வாயுப் பிரச்னைகள், ஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல், மூலம், சர்க்கரை நோய், இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இது. மனம் தொடர்பான பிரச்னைகளையும் இது சரிசெய்யும். கணையத்தில் உள்ள தேவையற்றக் கழிவுகளை நீக்கி இன்சுலின் உற்பத்திக்கு வழிவகுக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள், வயிற்று வலி பிரச்னை இருப்பவர்கள் இந்த முத்திரையைச் செய்யக் கூடாது.
பூஷன் முத்திரை
பூஷன் என்ற சமஸ்கிருத சொல் "ஊட்டமளிக்கும் ஒருவரை" குறிக்கிறது.
பூஷன் முத்திரை செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இது மூளையின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது மற்றும் குமட்டல் மற்றும் வாந்தியை நீக்குகிறது, குறிப்பாக அதிக உணவுக்குப் பிறகு. இந்த முத்திரை செரிமானத்தின் சைகை என்று அழைக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“