மலச்சிக்கல் என்பது பரவலாக நம்பப்படுவது போல் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தின் விளைவாகும். ஆனால் அது வைட்டமின் குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
உணவு மூலங்கள் மூலம் அதிக வைட்டமின் பி1 உட்கொள்வது, மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கும் என்று டாக்டர் சுதிர் குமார் சமீபத்தில் கூறினார். (neurologist, Apollo Hospitals, Hyderabad)
தியாமின் (வைட்டமின் பி1) குறைபாடு மலச்சிக்கல் உட்பட பல செரிமான பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தியாமின் பெரும்பாலான உணவுகளில் காணப்படுகிறது, இது தானியங்கள், இறைச்சி, மீன், இறால் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றில் ஏராளமாக இருந்தாலும், செயலாக்கத்தின் போது வைட்டமின் பி1 ஓரளவு அகற்றப்படுகிறது.
தியாமின் நீரில் கரையக்கூடியது, எனவே உடலில் சேமித்து வைக்கப்படுவதில்லை, அவை தினமும் மாற்றப்பட வேண்டும். சமீபத்திய ஆராய்ச்சியில், உணவின் மூலம் தியாமின் அதிகமாக உட்கொள்வது மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கும், என்று டாக்டர் குமார் கூறினார்.
நரம்பியல் மற்றும் இருதய செயல்பாடுகளை பராமரிப்பதில் வைட்டமின் பி1 முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் டாக்டர் விகாஸ் ஜிண்டால். (consultant, dept of gastroenterology, CK Birla Hospital, Delhi)
சமீபத்திய ஆய்வுகள் இரைப்பை குடல் ஆரோக்கியத்தில் அதன் சாத்தியமான நன்மைகளை ஆராயத் தொடங்கியுள்ளன, குறிப்பாக மலச்சிக்கல், இது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கும். இந்த சூழலில் தியாமினின் பங்கைப் புரிந்துகொள்வது உணவு மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகளுக்கான புதிய வழிகளை வழங்க முடியும்.
நட்ஸ், வாழைப்பழங்கள், ஆரஞ்சு, பட்டாணி மற்றும் முழு தானிய ரொட்டி ஆகியவற்றில் உள்ள தியாமின், கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு அவசியம், இது ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இரைப்பைக் குழாயில் உள்ள தசைகள் உட்பட தசைகளின் சீரான செயல்பாட்டிற்கு இந்த செயல்முறை முக்கியமானது.
தியாமின் குறைபாடு இரைப்பை குடல் தொந்தரவுகள் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், போதுமான தியாமின் உட்கொள்வது, மலச்சிக்கலைத் தடுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் வளர்ந்து வருகின்றன.
மேலும் "இரண்டாவது மூளை' என்று அடிக்கடி குறிப்பிடப்படும் குடல் நரம்பு மண்டலம், செரிமான செயல்முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. தியாமின் நரம்பு செல்களின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை ஆதரிக்கிறது, இது மூளை மற்றும் இரைப்பை குடல் இடையேயான தொடர்பை மேம்படுத்துகிறது, திறமையான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.
எனவே உணவு அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் போதுமான தியாமின் அளவை உறுதி செய்வது மலச்சிக்கலுடன் போராடும் நபர்களுக்கு ஒரு பயனுள்ள உத்தியாக இருக்கலாம், என்று டாக்டர் ஜிண்டால் முடித்தார்.
Read in English: Not just unhealthy food habits, this vitamin deficiency can also cause constipation
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.