தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் ஆங்காங்கே காணப்படுகிறது. இத்தாக்குதலின் அறிகுறிகள் வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிறமுள்ள நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலையின் அடிப்பகுதியில் இடும். மேலும், மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த ஈக்கள் ஓலைகளில் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சுவதுடன் இவை வெளியேற்றும். தேன்போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளில் படிந்து அதன்மேல் கேப்னோடியம் என்ற கரும்பூசணம் படர்வதனால் ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது.
தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்று குறித்து தென்னை விவசாயிகளிடம் விழுப்புரம் தோட்டக்கலை அதிகாரி ராஜலட்சுமி விளக்கி கூறினார்
/indian-express-tamil/media/media_files/2025/05/18/QjjFNnDANEe06hA0dhDD.jpeg)
விழுப்புரம் மாவட்டம் மயிலம், நெடிமோழியனூர் (B) பெரமண்டூர விவசாயிகளின் வயலில் தோட்டக்கலைத்துறை முலம் தென்னை மரத்திணை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறையைப் பற்றி தோட்டக்கலை அதிகாரி ராஜலட்சுமி கூறியதாவது:
பொதுவாகவே தென்னை மரத்தில் பரவும் வெள்ளை சாறு உறிஞ்சும் பூச்சி வகையைச் சேர்ந்த ஈக்களின் தாக்கம் கோடைக்காலங்களில் அதிகமாகவே இருக்கம். மழைக்காலங்களில் தாக்கத்தின் அளவு குறைந்து காண்படும். இதனைக் கட்டுப்படுத்த முதலில் தென்னை ஓலையுன் தண்ணீரை தெளிப்பான் மூலம் வேகமாக தெளிக்கவும், மேலும் தொடர்ந்து வேப்ப எண்ணெய் (லி. 5ml வீதம்) மற்றும் அதனுடன் ஒட்டும் பசை திரவத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1ml வீதம் கலந்து தெளிக்கவும். இதேபோன்று 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதனால் பூச்சி தாக்கத்திணை 70-80% கட்டுப்படுத்தும்.
மைதா கஞ்சியை ஓலையின் மேற்புறத்தில் தெளிக்கவும். இதனால், ஓலையுன் மேற்புரத்தில் உள்ள பூஞ்சை படலம் ஒளிச்சேர்க்கை திறன் மேம்படும் மற்றும் மகசூலை அதிகப்படுத்தும். பொதுவாகவே தென்னை நடவு செய்ததிலிருந்து முறையான உர மேலாண்மையை கடைபிடித்தால் தென்னையில் ஏற்படும் நோய் பூச்சி தாக்கத்தினை 50-66% குறைக்கலாம். மேலும் ஸ்பினோசேட்(ம்) எக்ஸோடம் போன்ற மருந்துகளை பயன்படுத்தியும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம் என்றார். இந்த விழிப்புணர்வு முகாமல் உதவு தோட்டக்கலை அலுவணர்கள் தேவேந்திரன் மற்றும் ஊஜயச்சந்திரன் மற்றும் உவசாயிகள் உடனிருந்தனர்.