cook with comali 2 vijay tv : விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் பாலா. கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சி மூலம் யார் இந்த பாலா..? என பலரையும் கேட்க வைத்தவர்.
Advertisment
மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் வெளியான ஜூங்கா படத்தின் மூலம் kpy பாலா
அறிமுகமானார்.வாழ்க்கையில் வெற்றி என்பது பெரும்பாலானவர்க்ளுக்கு எளிதில் கிடைத்து விடக்கூடிய ஒன்றல்ல. இன்று வெற்றி பெற்று புகழின் உச்சத்தில் இருக்கும் பெரும்பாலானோர் அந்த வெற்றியை பெறுவதற்காக தொடக்கத்தில் பட்ட கஷ்டங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் அதிகம் என்றே கூறலாம்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை அடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாலா அதன்மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.மிமிக்ரி திறமையை கொண்டிருந்த இவரை தயாரிப்பாளர் அமுதவாணன் விஜய் டி.விக்கு அழைத்து வந்தார்.கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சி இவரை தமிழகமெங்கும் கொண்டு சென்றது.
Advertisment
Advertisements
பாலாவை ஜூங்கா படம் மூலம் சினிமாவுக்கு கொண்டு வந்துவிட்டார் விஜய் சேதுபதி.குக் வித் கோமாளி தொடரில் இவர் செய்த காமெடிகள் வேறு ரகம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக எடுத்துச் சென்றார் பாலா.
கடந்த மாதம், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாலா தான் இந்த இடத்துக்கு வருவதற்காக பட்ட சிரமம் மற்றும் கஷ்டம் குறித்து கூறினார். இந்த இடத்துக்கு நான் சாதாரணமாக வந்து விடவில்லை எனவும் மேடையில் பர்பாமன்ஸ் செய்யும் போது சூடான டீயை எடுத்து கூட தன் மீது ஊற்றியுள்ளார்கள் எனவும் பாலா கூறினார்.
இப்படி விஜய் டிவி மூலன் சின்னத்திரையில் அறிமுகமான பலரின் வாழ்க்கையும் மாறியுள்ளது. சந்தானம் தொடங்கி சிவாகார்த்திகேயன் என லிஸ்ட் நீளும். அதுமட்டுமில்லை திறமை இருந்தால் வாய்ப்பும் வெற்றியும் கிட்டும் அதற்கு தோற்றம் முக்கியமில்லை என நிரூப்பித்தவர் பாலா. இப்போது விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி அடுத்ஹ சீசனும் ஒளிப்பரப்பாக உள்ளது. இதிலும் பாலா இருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”