குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் டி.வி பிரியங்கா, செய்த வெள்ளாட்டு தலைக் கறி பிரட்டல் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
அரை கிலோ தலைக் கறி
அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 கப் தண்ணீர்
2 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் சோம்பு
1 ஸ்பூன் சீரகம்
12 சின்ன வெங்காயம்
கீராம்பு, பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய், பிரியாணி இலை
5 ஸ்பூன் எண்ணெய்
1 வெங்காயம்
1 தக்காளி
அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் மல்லிப் பொடி
1 ஸ்பூன் சீரகப் பொடி
உப்பு
கொத்தமல்லி இலை கொஞ்சம்
செய்முறை : மட்டன் தலைக் கறியை நாம் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இதில் மஞ்சள் தூள், இஞ்சி- பூண்டு பேஸ்ட், தண்ணீர் சேர்த்து 7 விசில் விட்டு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சோம்பு, சீரகம், கீராம்பு, பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய், பிரியாணி இலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி அதை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், தக்காளி நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்த்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீரகப் பொடி, உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து வேக வைத்த தலைக்கறியை சேர்த்து அதன், தண்ணீரை சிறிதாக சேர்த்து கிளரவும். நன்றாக வதக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“