Cook with Comali fame Manimegalai Latest Viral Video Youtube Video : கிராமத்திலிருந்து வந்தவர்கள் முதல் முறையாக பிட்சா சாப்பிடும்போது எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், குக் வித் கோமாளி புகழ் மணிமேகலையும் அவருடைய கணவரும் இறங்கினார்கள். அவர்களுக்குத் தெரிந்த சிலருக்கு பிட்ஸா வாங்கிக்கொடுத்தனர். முதல் முறையாக அவற்றை சுவைத்தவர்கள், எந்த அளவிற்கு அதனை ருசித்து சாப்பிட்டார்கள் என்பதை பதிவு செய்து சமீபத்தில் தங்களின் யூடியூப் சேனலில் அப்லோட் செய்தனர். 7 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்ற இந்த வீடியோவில் அப்படி என்ன ஸ்பெஷல்? பார்க்கலாமா…

தாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் பிட்சா கிடைக்காது என்பதால், சுமார் 2 மணிநேரம் பயணம் செய்து வேறொரு இடத்திலிருந்து பிட்சாவை வாங்கி வந்தார் ஹுசைன். அவற்றை அங்குக் காத்திருந்த சில சிறுவர், சிறுமிகளுக்குக் கொடுத்தனர். அவ்வளவுதான்… ஃபன் ஸ்டார்ட் ஆனது. ஒருசிலர் அதனை முகர்ந்து பார்த்து, என்னடா இது என்று புலம்ப, சிலரோ பீட்சாவை தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்ததாக, சீசனிங்கை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று ஹுசைன் க்ளாஸ் எடுக்க, மற்றவர்களும் அதனை அப்படியே செய்தன.
பிறகு, யார் முதலில் மொத்த பிட்ஸாவையும் சாப்பிட்டு முடிக்கப் போகிறார்கள் என்று போட்டி வைக்க, எடுத்த எடுப்பிலேயே சில சிறுமிகள் இருமி இருமி சோர்ந்து போகினர். பிறகு அதனை ஆராய்ச்சி செய்யும் வேலையில் இறங்கினார்கள். அதனை முகர்ந்து பார்ப்பது, அதில் மேல் இருக்கும் சிக்கன் பீஸ்களை எடுத்து ஆராய்வது என சாப்பிடுவதைத் தவிர எல்லா வேலைகளும் நடைபெற்றன.
அதிலும் ஒருவர், தலையணையை வைத்து முகத்தை மூடிக்கொண்டார். சாப்பிடவே முடியாது என்று அவ்வளவு அடம். எப்படியாவது அவருக்கு ஒரு பீஸாவது ஊட்டிவிடவேண்டும் என்று மணிமேகலை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தது. கெட்டுப்போனது என்று மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது போல, ஹுசைன் முயற்சி செய்தும் ஒரு பீஸ் கூட அவர் சாப்பிடவில்லை. மணிமேகலையின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப்போனது.
அவரைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிறுமிகளையும் பிட்சா சாப்பிட வைக்கும் போரில் இறங்கினர் மணிமேகலை-ஹுசைன் ஜோடி. ஆனால், மீண்டும் அவர்களுடைய முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தது. அதனால், பீட்ஸாவை முழுவதும் சாப்பிட்டு முடித்த சிறுவர்களின் உதவியைக் கேட்க, சிறுமிகளின் கை, கால்களைப் பிடித்து எப்படியோ பீட்ஸாவை வாயில் வைத்துவிட்டனர். அவ்வளவுதான், வாந்தி எடுக்காத குறைதான். இனிமேல் தங்களின் வாழ்நாளில் இந்த பீட்சாவை தொடவே மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிட்ஸா சாப்பிடும் சவாலுக்காக ஆரம்பமான இந்த வீடியோ இறுதியில் பீட்ஸாவை சாப்பிட வைக்கும் சவாலாக மாறி, பல லட்ச வியூஸ்களையும் பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil