Advertisment

வாஷிங்டன் சுந்தருக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்த புகழ்.. என்னாச்சுனு பாருங்க!

புகழ் தனது ’பரட்டை புகழ்’ யூடியூப் சேனலில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து’ அவுட்டிங் சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Pugazh Washington Sundar

Cook with comali fame pugazh Washington sundar video viral on youtube

விஜய் டிவியின் பாப்புலர் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 சமீபத்தில், தொடங்கியது. இதில், 10 போட்டியாளர்கள், 10 கோமாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

முந்தைய சீசன்களில், புகழ் அனைவரையும் கவர்ந்த போட்டியாளராக இருந்தார். அவரது டைமிங் காமெடிகள் ரசிகர்களுக்கு பிடித்தது. அதில் கிடைத்த வரவேற்பால், புகழ் வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, குக் வித் கோமாளி சீசன் 2இல் ஃபைனல்ஸ் வரை வந்த அஷ்வின் ஹீரோவாக அறிமுகமான ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தில், புகழும் காமெடியனாக முக்கிய கேரேக்டரில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து, அஜித்தின் வலிமை, சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்', விஜய் சேதுபதியின் 46வது படம், யோகி பாபுவின் 'காக்டெய்ல்’ என வரிசையாக பல படங்களில் புகழ் நடிக்கிறார்.

இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 3 புரோமோக்களில், புகழ் இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், நிகழ்ச்சியின் முதன்மை நடுவர்களில் ஒருவரான செஃப் தாமு, புதிய சீசனில் புகழ் இருப்பார் என்று ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.

ஆனால் அவர் முதல் இரண்டு எபிசோட்களில் இல்லை. இந்நிலையில், குக் வித் கோமாளி  செட்டில், சீசன் 3 போட்டியாளர்களுடன், புகழ் எடுத்த படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகியது. அதனால், இனிவரும் எபிசோட்களில் புகழ் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், புகழ் தனது ’பரட்டை புகழ்’ யூடியூப் சேனலில் கிரிக்கெட்  வீரர் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து’ அவுட்டிங் சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில்’ புகழ்’ வாஷிங்டன் சுந்தருக்கு எப்படி கிரிக்கெட் விளையாடனும்னு சொல்லிக்கொடுக்க போறேன் என ஆரம்பிக்கும் போதே’ இந்த வீடியோ பயங்கர அமர்க்களமாக இருக்கப்போகிறது என்பது தெரிகிறது.

புகழ், வாஷிங்டன் சுந்தர், குக் வித் கோமாளி சக்தி மூவரும் சென்னையில் உள்ள, பிரபல விளையாட்டு பொருட்கள் விற்கும் மாலுக்கு அவுட்டிங் சென்றுள்ளனர். அங்கு வைத்து தான் இந்த வீடியோ எடுத்துள்ளனர். முதலில், புகழும், சுந்தரும் டேபிள் டென்னிஸ் விளையாட, சக்தி அம்பயராக இருந்து, வர்ணனை செய்கிறான்.

அதில் ஒரு வழியான பிறகு, மூன்று பேரும் சேர்ந்து, அங்குள்ள மற்ற கேம்களை ஒரு விசிட் அடித்துவிட்டு, கிரிக்கெட் விளையாடும் இடத்துக்கு செல்கின்றனர். அங்கு புகழ், சக்தி இருவரும் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்து குழந்தைகளை விட மோசமாக கிரிக்கெட் விளையாடினர். இந்த போட்டியில் சுந்தர் வெற்றி பெற்றார். இறுதியில், சுந்தருக்கு ஆட்காட்டி விரலில் காயமிருந்தும், அவர் விளையாடியதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இந்த இன்சுரி அடுத்த செஞ்சுரி அடிக்கிற அளவுக்கு இருக்கனும் என ஃபாரின் பிளேயர் தமிழை பேச தெரியாமல் பேசுவது போல புகழ் பேசுகிறார். இப்போது இந்த வீடியோ யூடியூபில் வைரலாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment