Cook with Comali fame Rithika Viral Youtube Video Tamil News : “என்னை நேசிக்கிற சிலரை இன்று என் பிறந்தநாள் அன்று பார்க்கப்போகிறேன். அவர்களோடு என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடவேண்டுமென ஆசைப்பட்டேன். அவர்களைப் பார்க்கப்போவதில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாங்கப் போய் பார்க்கலாம்” என்றபடி ஆரம்பமாகிறது குக் வித் கோமாளி புகழ் ரித்திகாவின் இந்த வைரல் வீடியோ.
கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்த ரித்திகா, ராஜா ராணி சீரியல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி, பாக்கியலட்சுமி என விஜய் டிவியின் ஃபேவரைட் நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனல் அதில் ஏராளமான காணொளிகளை அப்லோட் செய்து வரும் ரித்திகா, சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை தன் ரசிகர்களோடு கொண்டாடினர். அதில் அவரிடம் ஏராளமான கேள்விகளை ரசிகர்கள் முன்வைக்க, ஒவ்வொன்றுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.
தன்னுடைய தம்பி, தங்கைகள் தனக்காக வாங்கியது இது என்று கூறி முதலாவதாக கேக்கை கட் செய்து அனைவர்க்கும் கொடுத்தார் ரித்திகா. பிறகு ரசிகர்களோடு அமர்ந்து அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்தார்.

நீங்கள் பார்த்து இன்ஸ்பைர் ஆன பெண் யார்?
என்னுடைய அம்மாதான். சிறுவயதிலிருந்தே அவங்களைதானே பார்த்து வளர்க்கிறோம். அம்மாவிற்கு அடுத்தது என்றால், ஜெயலலிதா அம்மா. அவங்க ஒரு பெண் சிங்கம் மாதிரி. கண்டிப்பா எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றால் நிச்சயம் அவங்கதான்.
சிறு வயதில் உங்கள் கனவு என்ன? உங்கள் வேலை அதனைத் தடுப்பதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
எனக்கு பொதுவாகவே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க நிறையப் பிடிக்கும். அதனால்தான், ஆசிரியர் வேலை பிடிக்கும். ஆனால், படிப்பையே என்னால் அந்த அளவிற்கு சரியாக கவனம் செலுத்தி முடிக்க முடியவில்லை. எப்படி எப்படியோ பாதை மாறி இப்போது இந்த நிலைமையில் இருக்கிறேன். வருங்காலத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இல்லையென்றாலும், வீட்டிலேயே 10 குழந்தைகளை வைத்து டியூஷன் நடத்துவேன்.
குக் வித் கோமாளியில் கேமரா முன்பு இருப்பது போலதான் அனைவரும் எப்போதுமே இருப்பீர்களா?
கேமரா இல்லையென்றால் இன்னும் சேட்டைகள் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், மதுரை முத்து அண்ணா மட்டும் கொஞ்சம் வித்தியாசம். கேமரா இல்லையென்றால், மிகவும் அமைதியாக இருப்பார். கேமரா ஆன் செய்துவிட்டால் போதும் துள்ளி குதிப்பார். மற்றபடி, மற்ற எல்லோருமே கேமரா முன்பு இருப்பது போலதான் சுட்டித்தனம் செஞ்சிட்டு இருப்போம்.
பாலா பற்றி?
அவர் ரொம்பவே நேர்மையான ஆளு. டைமிங் கவுன்ட்டருக்கு அவரை அடிச்சுக்க ஆளே இல்லை. இப்போது மிகவும் பிஸியாகிவிட்டார். அவ்வளவு பெரிய உழைப்பாளி. அதேபோல, ஞாபக சக்தி அவருக்கு ரொம்பவே அதிகம். எவ்வளவு பெரிய ஸ்க்ரிப்ட் கொடுத்தாலும், அப்படியே செய்து முடித்துவிடுவார். மிகவும் திறமைசாலி.
பாக்கியலட்சுமி சீரியலில் உங்களோடு இணைந்து நடிக்கும் விஷால் செட்டில் எப்படி இருப்பார்?
எழில் மிகவும் மெச்சூர்டான கதாபாத்திரம். ஆனால், விஷால் துறுதுறு மனிதர். அவருடைய வாய் ஓயாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கும். சுட்டித்தனம் அதிகம்.
இந்த கேள்வி நேரம் முடிந்த பிறகு அங்கு வந்திருந்த அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து விடைபெற்றார் ரித்திகா. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கும் இந்த காணொளி பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாகவே இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil