Cook with Comali fame Sivaangi Viral Youtube Video : சூப்பர் சிங்கரில் கலக்கினாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம்தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் ஷிவாங்கி. தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலில் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏராளமான Vlog காணொளிகளை அப்லோட் செய்து வருகிறார். சமீபத்தில் தன் குடும்பத்தோடு துபாய்க்கு சென்ற ஷிவாங்கி, அங்கு ஏராளமான இடங்களுக்குச் சென்று அவற்றைப் பற்றிய சிறப்புக் காணொளிகளை அப்லோட் செய்து, மில்லியன் கணக்கில் வியூஸ்களை அள்ளி வருகிறார். அந்த வரிசையில் துபாயில் நெதர்லாந்து என்ற சுவாரசிய காணொளி ஒன்றை அப்லோட் செய்திருக்கிறார் ஷிவாங்கி.
“துபாயில் சிங்கப்பூர், நெதர்லாந்து போன்றவற்றைப் பார்க்கப்போகிறோம். அப்புறம் என்ன சொல்றதுன்னு தெரியல” என்றபடி வேற லெவல் இன்ட்ரோவோடு இந்த காணொளியைத் தொடங்கினார். “இரண்டு நாள்களாக நடந்து நடந்து கால்கள் வலிக்கின்றன. ஆனால், இன்று ஏராளமான இடங்களைச் சுற்றிப் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவதாக சிங்கப்பூரைப் பார்க்கலாம். Nature, Nurture, Future என்கிற தீமில் சிங்கப்பூரை இங்கு செட்-அப் செய்திருக்கிறார்கள். காடுகளைப் போல செட்-அப். பார்க்கவே மிகவும் குளிர்ச்சியாக உள்ளது” என்றபடி சிங்கப்பூரை சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்ததாக நெதர்லாந்துக்கு சென்றார்.
“பயங்கரமான கிரியேட்டிவிட்டி வேலைப்பாடுகள் நிறைந்த இடமாக நெதர்லாந்து இருக்கிறது. அதிலும், இங்குள்ள உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முக்கியமாக அனைத்தும் சைவ உணவுகளாக இருப்பது கூடுதல் சந்தோஷத்தை தருகிறது” என்றபடி அங்கு பல்வேறு உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்தார் ஷிவாங்கி.
அடுத்ததாக அமேசான் நதியை உணரவேண்டும் என்பதற்காக பிரேசில் நாட்டை மினியேச்சராக உருவாக்கி இந்த எக்ஸ்போவில் வைத்திருக்கின்றனர். அதனை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தவர், அடுத்ததாக சுவீடன், ஸ்லோவேனியா, ஜெர்மனி ஆகிய இடங்களுக்குச் சென்றார். அந்த ஊர்களுக்குச் செல்ல அவர் தேர்வு செய்த வாகனம் சைக்கிள். ஜெர்மனியில் பந்துகள் நிரம்பிய கூடாரத்தில் சின்ன குழந்தை போலத் துள்ளிக்குதித்தார் ஷிவாங்கி. ஊஞ்சல் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகளை முழுமையாக விளையாடித் தீர்த்தார்.
பிறகு சவுதி அரேபியாவில் நுழைந்தவர் அங்கு ஐஸ் க்ரீம் உள்ளிட்ட சில டெஸ்ஸர்ட் வகைகளை உண்டு மகிழ்ந்தார். பிறகு, ராட்டினம் உள்ளிட்ட சில விளையாட்டுகளை விளையாடிவிட்டு ஆனந்தமாய் அங்கிருந்து விடைபெற்றார். இந்த எக்ஸ்போ இனிமேல் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் போடுவார்கள், அதற்குள் தனக்கு திருமணம் ஆகியிருக்கலாம் என்கிற தகவலோடு காணொளியை நிறைவு செய்கிறார் ஷிவாங்கி. இந்த காணொளி 2 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil