Cook with Comali Kani about Culture Viral Video Tamil News : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நம் எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டு, அந்த சீஸனின் வெற்றியாளராகவும் மகுடம் சூட்டப்பட்டவர் கனி. சமீபத்தில் மக்களோடு நேரடி உரையாடலில் ஈடுபட்டவர், மக்களின் சில கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார். அதில் தாலியை பற்றி எழுபட்டப்பட்ட கேள்விக்கு கனி கொடுத்த பதில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
Advertisment
தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனல் வைத்திருக்கும் கனி, அதில் வரும் ஏராளமான கமென்டுகளுக்கும் பதிலளிப்பார். அந்த வரிசையில், ஏன் தாலி போடவில்லை என்கிற கேள்விக்கு வெளிப்படையாகவே பதிலளித்தார் கனி.
"தமிழ் கலாச்சாரத்தில் தாலி என்கிற ஒன்று இல்லை. அது இடையில் புகுத்தப்பட்டதுதான் என நம்புகிறேன். நம் கலாச்சாரத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதங்களுடன் நம்ம மனதுக்குப் பிடித்தவர்களுடன் மாலை மாற்றிக்கொள்வது மட்டும்தான் இருந்தது என்பது என் நம்பிக்கை.
ஆனால், நான் தாலி கட்டிதான் கல்யாணம் செய்துகொண்டேன். ஆனால், தாலி பிரித்து காட்டியபோது அது என் சொந்தக்காரர்கள்தான் கட்டினார்கள். என் கணவர் இல்லை. அப்போது ஏன் யாரோ கட்டிய தாலி இருக்கவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு பின்புதான் அதன்மீது ஈடுபாடு இல்லாமல் போனது.
என்றாலும் என் கணவர் கட்டிய தாலியை என் உயிர் போல பத்திரமாக வைத்திருக்கிறேன். ஒருத்தருடைய குணத்தை தீர்மானிப்பது தாலி இல்லை. என்னுடைய 8 வருட காதல் மற்றும் 12 வருட திருமண வாழ்க்கை, எங்களுடைய 2 குழந்தைகள் என என் வழக்கை சந்தோஷமாக இருக்கிறது. இதை சொல்ல தாலி தேவையில்லை" என்கிறார் கனி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil