இயக்குனர் அகத்தியன் மகள் என்றால் சும்மாவா? குத் வித் கோமாளி புகழ் கனி சீக்ரெட்ஸ்!

கனி இயக்குனர் திருவை கல்யாணம் செய்துக் கொண்டார்.

By: Updated: January 30, 2021, 02:30:35 PM

cook with comali kani husband : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் வயல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கொடுத்து ஐஸ்வர்யாவை ஒரு காட்டு காட்டியவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் தனது 17 வயதில் சென்னை 28 படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலக்ஷ்மி சில ஆண்டுகளுக்கு முன்பு பேரொஸ் முகமது என்ற துணை இயக்குனரை இரு வீட்டார் முன்னிலையிலும் திருமணம் செய்துகொண்டார்.இவர் அறிவழகனின் துணை இயக்குனர் ஆவார். அகதியனுக்கு மொத்தம் 3 மகள்கள் .

முதல் மகள் கனி இயக்குனர் திருவை கல்யாணம் செய்துக் கொண்டார். இரண்டாவது மகள் விஜி, அவருக்கு அடுத்த நிரஞ்சனி. இவரும் இப்போது சினிமா பிரபலம் தான்.நிரஞ்சனி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். தமிழில் சிகரம் தோடு, காவிய பணியாற்றியுள்ளார். கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.இவரைப் பார்த்தால் அச்சு அசலாக விஜயலட்சுமி போல இருப்பார்.

இவருக்கு தான் அடுத்தாக, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இயக்குனர் உடன் திருமணம். அடுத்தது, கனி இப்போது குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி ரொமப் பிஸி. அதுமட்டுமில்லை, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கனி ஆடை வடிவமைப்பாள்ராகவும் பணி புரிந்தார். கனியின் திருமணம் காதல் திருமனம்.

இதற்கு தூது போனவரே விஜி தான். கனியை தான் திரு, விஜியிடம் ஐஸ் வைக்க அப்படியே இருவரின் காதலுக்கும் தூது போய் இருக்கிறார் விஜி. அதுமட்டுமில்லை, கனி தற்போது யூடியூப்பிலும் கலக்கி வருகிறார்.ஆமாம் பொன்னியின் செல்வன் பகுதிகளை கதை போல் விளக்கி வருகிறார். ஏகப்பட்ட லைக்ஸ். கனியின் சமையல் பற்றி கேட்கவே வேண்டாம் டிவியில் தான் பார்க்கிறோமே.

ஆக, மொத்தத்தில் அகத்தியன் மகள்களும் மூவரும் சக்சஸ் ஃபுல் விமன்ஸ் தான்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Cook with comali kani husband cook with comali kani sisters family cwc kani instagram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X