Cook with Comali Kani Youtube Channel Tamil News : வேறு எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிற்கும் இல்லாத வரவேற்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்குக் கிடைத்தது. அதிலும் இரண்டாம் சீசன் நிறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தியது என்றும் சொல்லலாம். அதன் வெற்றியாளராகக் கனி தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏராளமான மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறார். இயக்குநர் அகத்தியனின் மூத்த மகளான கனி, இயக்குநர் திருவை மணமுடித்தார்.
Advertisment
Cook with Comali Kani
குக் வித் கோமாளி, இவருடைய முதல் ரியாலிட்டி ஷோ அல்ல. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் டிவியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு எனும் நேரடி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும், தற்போது தனக்கென ஓர் யூடியூப் சேனலையும் தொடங்கியிருக்கிறார். 9 வருடங்களுக்கு முன்பே தனிப்பட்ட சேனலை ஆரம்பித்திருந்தாலும், 10 மாதங்களுக்கு முன்பிலிருந்து 'Theatre D' எனும் பெயரில் இருக்கும் இந்த சேனலில் கதைசொல்லியாக மக்களை சந்தித்தார்.
Advertisment
Advertisements
புராணக் கதைகள் மீது அதிக ஆர்வமுள்ள கனி, பல சிறுகதைகளை அழகான தமிழில் பகிர்ந்து வந்தார். அந்த இவருக்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்தது, 'பொன்னியின் செல்வன்' கதைதான். வாரவாரம், ஒவ்வொரு அத்தியாயத்தையும் மக்களோடு பகிர்ந்து வந்தார்.
Kani with Cook with Comali Trophy
இந்நிலையில்தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று அதில் வெற்றி வாகையும் சூடினார். இதனைத் தொடர்ந்து, ஆயிரங்களிலிருந்த இவருடைய சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை தற்போது 2.59 லட்சமாக உயர்ந்துள்ளது. சமையல் நிகழ்ச்சியின் வெற்றியாளர், சமையல் குறிப்புகளைக் கொடுக்காமல் விடுவாரா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் செய்து அசத்திய பல உணவு வகைகளை செய்து காட்டி தற்போது காணொளிகளைப் பதிவு செய்து வருகிறார்.
&t=3s
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் இவருடைய சேனலில், அழகிய தமிழுக்கே முதல் இடம். அவருடைய உச்சரிப்புக்காகவே அத்தனை ரசிகர்கள். இவர் பகிர்ந்துகொள்ளும் வீடியோக்கள் விரைவில் ட்ரெண்டிங்கில் சேர்வதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil