Cook with Comali Manimegalai Dubai Vlog Viral Video Tamil News : சன் மியூஸிக்கில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தாலும், மக்கள் மனதில் மணிமேகலை எனும் நகைச்சுவை கலைஞராக நீங்கா இடம் பிடித்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான். முதல் மற்றும் இரண்டாம் சீசனில் கலக்கியவர், தன்னுடைய யூடியூப் சேனல் வாயிலாகவும் மக்களை என்டெர்டெயின் செய்துகொண்டிருக்கிறார். அந்த வரிசையில் சமீபத்தில் துபாய் பயணம் மேற்கொண்ட மணிமேகலை-ஹுசைன் ஜோடி, அங்கு ஏராளமான Vlog காணொளிகளை சேனலில் பதிவிட்டு வந்தனர். துபாயில் அவர்களின் இறுதி நாள் அன்று ஹுசைன் மணிமேகலைக்குக் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ இப்போது பலரின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்திருக்கிறது.

எடுத்ததுமே மணிமேகலையை நகைக்கடைக்கு சர்ப்ரைஸாகக் கூட்டிச் சென்று அவருக்கு நகை பரிசாகக் கொடுக்கலாம் என்பதை நமக்கு மட்டும் சொல்லி, மணிமேகலையை காரில் கடைக்கு அழைத்துச் செல்கிறார் ஹுசைன். அதுவும் அங்கு தாங்கள் வாங்கிய புதிய மொபைலில் இந்த காணொளியைப் பதிவு செய்வதை அவ்வப்போது நகைச்சுவையாகச் சொல்லிப் பூரித்துக்கொண்டிருந்தனர். அதில் அவ்வப்போது மணிமேகலையை ஃபோகஸ் செய்து நம்மை பயமுறுத்துகிறார் ஹுசைன்.

புது மொபைல் என்பதால், ஏராளமான முக பாவனைகளை செய்து மேலும் மேலும் நம்மை பயத்திலேயே வைத்துக்கொண்டிருந்தார் மணிமேகலை. துபாயில் கேப் புக் செய்தால்கூட காஸ்ட்லீ காராக வருவதால் அந்த பயணத்தையும் ரசித்தபடி காணொளியைத் தொடர்ந்தார் ஹுசைன். கடைக்குள் சென்று பர்ச்சேசிங் தொடங்குவதற்குள் பசி எடுத்துவிட்டதால், நம்ம ஊரு பரோட்டா முதல் தயிர் சாதம் வரை அனைத்தையும் ருசித்துவிட்டு கடைக்குச் சென்றனர்.
துபாயில் தங்கத்தின் விலை குறைவு அதனால் எப்படிதான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்பதுபோல மணிமேகலையை அழைத்துச் சென்று, அங்கு செயின் வாங்கிக்கொள் என்று ஹுசைன் சொல்ல, அதனோடு சேர்த்து ப்ரேஸ்லெட்டையும் சேர்த்து அள்ளுகிறார் மணி. அப்போது மணிமேகலையின் முக ரியாக்ஷனை பார்க்கணுமே! உண்மையில், அவ்வளவு சந்தோஷம்.
‘சர்ப்ரைஸ் பண்ணுறேன் என்று ஹுசைன் மாட்டிகிட்டார்’ என்றபடி அந்த கடையை ஒரு வழிப்படுத்திவிட்டார் மணிமேகலை. சந்திரமுகி ஜோதிகா ரேஞ்சிற்கு நகையைப் பார்த்ததும் அவ்வளவு ஆனந்தம். எந்த ஊரில் நகைக்கடைக்குச் சென்றாலும், அங்குக் கொடுக்கும் இலவச டீயை மிஸ் செய்ய கூடாது என்றபடி சூடாக டீ குடித்துவிட்டு மிகவும் சந்தோஷமாக இருவரும் துபாயை விட்டே பறந்து சென்னை வந்தடைந்தனர். ஒரே நாளில் 2 லட்சம் வியூஸ்களை பெற்று விரையில் ட்ரெண்டிங்கிலும் வரவிருக்கிறது இந்த இறுதி நாள் துபாய் வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil