Cook with Comali Manimegalai Hussain Youtube Channel Tamil News
Cook with Comali Manimegalai Hussain Youtube Channel Tamil News : குக் வித் கோமாளியில் அனைவரின் ஃபேவரைட் கோமாளியாக வலம் வந்தவர் மணிமேகலை. இவர் தன் கணவருடன் இணைந்து, 'ஹுசைன் மணிமேகலை' என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, ஏராளமான சுவாரசிய கன்டென்ட்டுகளை பதிவேற்றி வருகிறார். இவரின் இந்த வீடியோக்கள் மக்களிடத்தில் அதீத வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
Advertisment
சமீபத்தில்தான் இவருடைய சேனல் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்களை பெற்றது. ஆனால், இவருடைய பல வீடியோக்கள் பல மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கிறது. சென்ற வருடம் லாக்டவுன் காலகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த சேனலில் Vlogs காணொளிகள்தான் அதிகம். அவைதான் மக்களிடத்தில் அதிக வரவேற்பையும் பெற்றன.
ஸ்பெஷல் டீ மற்றும் காபி போடும் சேலஞ், டின்னர் டைம் சாட், குடும்ப பட்ஜெட் என வீட்டிலிருந்தபடியே என்ன கன்டென்டெல்லாம் பதிவேற்ற முடியுமோ, அத்தனையும் பதிவேற்றி லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளினார். இவருடைய அத்தனை காணொளிகளிலும் மணிமேகலையின் கணவர் ஹுசைனின் பங்களிப்பு இருக்கும்.
மேக்அப், சரும பராமரிப்பு, ஷூட்டிங் ஸ்பாட், பேய் இருக்க இல்லையா என சோதனை செய்வது, கோவா சுற்றுலா ஃபன், போட்டோஷூட் என இவருடைய சேனலில் இல்லாத எண்டெர்டெயினிங் கன்டென்ட்டுகளே இல்லை. அத்தனையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும் காணொளிகள்தான்.
அதிலும் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று அங்கு உள்ள சொந்தக்காரர்களோடு சேர்ந்து இருவரும் செய்த அட்ராசிட்டிகள் .வேற லெவல். அதேபோன்று இந்த முறை லாக்டவுனிலும் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர் ஹுசைன் மணிமேகலை ஜோடி.
அங்குச் சென்றவர்கள், அங்கு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தங்களின் உறவினர்களின் ஹோட்டலுக்குச் சென்று, ஒருநாள் முதலாளியாக கல்லாப்பெட்டியில் அமர்ந்தார். இதனை தங்களுடைய ஹோட்டலாகவே பாவித்து, Vlog வீடியோ எடுத்திருக்கின்றனர். இந்த ஹோட்டலின் பெயர் 'அம்மன் மெஸ்'. இங்கு மணிமேகலை ஹாஃப் பாயில் போட முயற்சி செய்து பல்பு வாங்கியதுதான் மிச்சம். இன்றும் அனைவராலும் விரும்பப்படும் கோமாளியாகவே வளவந்துகொண்டிருக்கிறார் மணிமேகலை.
இது சுற்றுவட்டாரத்தில் எல்லோருடைய ஃபேவரைட் ஹோட்டலாக மாறி வருகிறது என்று கூறி கல்லாப்பெட்டியில் அமர்ந்து மணிமேகலை செய்யும் காமெடி மொமென்ட்டுகள் பலரின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நேற்று அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோதான் இன்றைய நாளின் ட்ரெண்டிங் லிஸ்ட்டில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil