Cook with Comali Manimegalai Youtube Channel Tamil News : சாமான்ய மக்களை பிரபலங்களாக்கிக்கொண்டிருந்த யூடியூப் பிளாட்ஃபார்ம், தற்போது பிரபலங்களின் தளமாகவே மாறிக்கொண்டு வருகிறது. அதிலும், சின்னதிரையின் வைரல் ஸ்டார்கள்தான் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த வரிசையில் இந்த வாரத்தின் ட்ரெண்டிங் ஸ்டார் முன்றைய தொகுப்பாளியும் இன்றைய கோமாளியுமான ( குக் வித் கோமாளி) மணிமேகலை.

தன் கணவரோடு இணைந்து ‘ஹுசைன் மணிமேகலை’ எனும் பெயரில் தொடங்கிய இந்த சேனலின் ஸ்பெஷாலிட்டி, இது முழுக்க முழுக்க ‘ஃபன் ஃபில்டு’ சேனல். கணவன்-மனைவி இருவரும் இணைந்து தங்களின் தினசரி வாழ்வை நகைச்சுவையாகப் படம்பிடித்து மக்களை சிரிக்க வைப்பதே இவர்களின் நோக்கம். இதுவே இவர்களின் வெற்றிக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இவர்களுடைய சேனலுக்கான சிறந்த விருதையும் ஓர் தனியார் சேனல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹுசைன் – மணிமேகலை இருவரும் காதலித்து தங்கள் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரும் தனித்து வாழும் சூழ்நிலையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மணிமேகலைக்கு மிகப் பெரிய பிரேக் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, மணிமேகலையும் ஹுசைனும் தங்கள் பேரில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தனர்.

தற்போதைய நிலவரப்படி கிட்டதட்ட 1 மில்லியன் மக்கள் இவர்களைப் பின்பற்றுகின்றனர். இதற்கான காரணம் மணிமேகலையின் குறும்புத்தனம்தான். அதிலும், சமைக்கவே தெரியாத மணிமேகலை, குக்கரில் சாதம் வைத்தபோது வெடித்துச் சிதறியதுதான் இவர்களுடைய முதல் ஹிட் வீடியோ. இதனைத் தொடர்ந்து அழகு குறிப்புகள், பயணம், உணவு, பொங்கல் திருவிழா உள்ளிட்ட ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் மணிமேகலைக்கு விபத்து ஏற்பட்டு, ரெஸ்ட்டில் இருந்தார். மீண்டும் தங்களின் யூடியூப் பயணத்தைத் தொடங்கியபடி இவர்களின் இந்த வார வீடியோ ட்ரெண்டிங். ‘வி ஆர் பேக்’ எனும் தலைப்பு கொண்ட இந்தக் காணொளியில் மணிமேகலையின் அட்ராசிட்டி குறைவாக இருந்தாலும், இவருடைய உடல்நலத்தைப் பற்றித்தான் மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களுடைய ஹோம் டூர் காணொளி மற்றும் லாக்டவுன் ஷாப்பிங் காணொளி 2 மில்லியன் வியூஸ்களை தாண்டி போய்க்கொண்டே இருக்கிறது. குக் வித் கோமாளி நிறைவுபெறும் தருணத்தில், நிச்சயம் மக்கள் கூடும் இடம் யூடுப் என்றே சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil