Advertisment

கனவு நிறைவேறியது.. கண்கலங்கிய சோட்டு : மணிமேகலை - ஹுசைன் யூடியூப் வைரல் வீடியோ!

Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Video Tamil News அதிலும் நிச்சயம் விநாயகர் சதுர்த்தி அன்றுதான் டெலிவரி எடுக்கவேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள்.

author-image
WebDesk
New Update
Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Video Tamil News

Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Video Tamil News

Cook with Comali Manimegalai Hussain Youtube Viral Video Tamil News : இந்த மாதம் சின்னத்திரை கலைஞர்களின் கார் வாங்கும் மாதம் போல. சென்ற வாரம்தான் ராஜா ராணி புகழ் ஆல்யா - மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி KIA கார் வாங்கினார்கள். அதனை தங்களின் யூடியூப் சேனலில் காணொளியாகப் பதிவு செய்து லைக்ஸ்களை அள்ளினார்கள். அதேபோல, இந்த வாரம் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை மற்றும் தன் கணவர் ஹுசைன் இருவரும் BMW கார் வாங்கி தங்களின் யூடியூப் சேனலில் அப்லோட் செய்துள்ளனர். இந்த காணொளி 6 லட்சம் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

Advertisment
publive-image

வழக்கம்போல தங்களுக்கே உரித்தான நக்கல் பாடி லேங்குவேஜ்ஜில் இந்த காணொளியையும் தொடங்கினர். "என்னடா இந்த ரெண்டு மூஞ்சிகளையும் பார்த்தா BMW-ல் கார் வாங்க வந்ததுபோல இல்லையே. சைக்கிள் வாங்க வந்துருப்பாங்களோ என்று நீங்கள் நினைக்கலாம். இந்த ஷோரூமில் இருப்பவர்களும் அதேதான் நினைத்தார்கள். ஆனால், இந்த பிராண்டில் கார், சைக்கிள் இரண்டு வாங்குவதும் ஒன்றுதான் என்பதனால், நாங்கள் கார் வாங்கப்போகிறோம்" என்றபடி காணொளியை தொடங்கினார் மணிமேகலை.

publive-image

"எங்கள் வாழ்க்கையில் எல்லாமே எதிர்பாராமல்தான் நடைபெறுகின்றன. எங்கள் திருமணம்கூட நேற்று முடிவு செய்து இன்று நடந்தது. அந்த வரிசையில் இந்த காரும் இடம்பெறும்" என்றபடி அவர்களின் ஃபிளாஷ்பேக்கிற்கு சென்றனர் மணி- ஹுசைன் ஜோடி. தங்களின் மணவாழ்க்கை தொடங்கியதிலிருந்து, ஏராளமான கனவுகளை லிஸ்ட் போட்டு வைத்துக்கொண்டனர். அந்த வரிசையில் இந்த கார் வாங்குவதும் ஒன்று. அதிலும் ஹுசைனுடைய லிஸ்ட்டில் இதற்குத்தான் முதலிடமாம்.

publive-image

ஏதோ ஒரு காரணத்திற்காக BMW ஷோரூம் வழியாக இருவரும் செல்ல, திரும்பவும் ஏதோ ஒரு எண்ணத்தில் அந்த ஷோரூம் உள்ளே சென்று கார் பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள, ஒரே வாரத்தில் அந்த காரை தங்களின் வீட்டிற்கும் கொண்டு சென்றிருக்கின்றனர். அதிலும் நிச்சயம் விநாயகர் சதுர்த்தி அன்றுதான் டெலிவரி எடுக்கவேண்டும் என்று தீர்மானமாக இருந்தவர்கள், அதற்குள் தேவையான ஃபார்மாலிட்டிகளை முடித்திருக்கின்றனர்.

"நம் சம்பாத்தியத்தில் வாங்கும் சிறிய பொருள் என்றாலும் அது கொடுக்கும் சந்தோஷம் நிறைவாக இருக்கும். அப்படிதான், எங்கள் கனவுகளில் ஒன்றான இந்த கார் ஆசை நிறைவேறியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்ற மணிமேகலையின் கண்கள் கலங்கின.  காலண்டர்படி நல்ல நேரத்திற்கு 3 மணிநேரம் முன்பே ஷோரூம் சென்றடைந்தவர்களின் கைகளில், கார் சாவி வந்தது. இருவரின் கண்களிலும் அவ்வளவும் ஆனந்தம். நமக்கும் அவர்களின் புதிய காரை சுற்றிக்காட்டி, பூஜை செய்ய பாடிகாட் முனீஸ்வரர் கோயிலுக்கு ஓட்டிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் கார் எண், ஒற்றை எண்ணில் வரவுள்ளதாம். அது என்ன என்று கண்டுபிடியுங்கள் என்றபடி காணொளியை நிறைவு செய்தனர் மணிமேகலை-ஹுசைன் ஜோடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vj Manimegalai Youtube Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment