Cook with Comali Manimegalai Make up Tricks and Tips
Cook with Comali Manimegalai Make up Tricks and Tips Tamil News : தொகுப்பாளினியாக அறிமுகமாகி, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் ஃபேவரைட் கோமாளியாக இருக்கும் மணிமேகலை, தன்னுடைய மேக்-அப் ரொட்டின் பற்றி அவருடைய யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார். குறைபாடற்ற மேக்-அப்பிற்கான டிப்ஸ்களுடன் தன் கணவர் ஹுஸைனுடன் பகிர்ந்துகொண்ட உபயோகமான டிப்ஸ் இங்கே.
Advertisment
Cook with Comali Manimegalai
"என்னுடையது காம்பினேஷன் ஸ்கின் என்பதால் நான் மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கவே மாட்டேன். எப்போதாவது வைட்டமின்-E மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பேன். பொதுவாகவே மேக்-அப் போடுவதற்கு முதலில் ஸ்டிக்-ஃபவுண்டேஷன் பயன்படுத்துவேன். அப்போதும் ஃபவுண்டேஷன் தேர்வு செய்வதற்கு முன் உங்கள் சருமத்திற்கு ஏற்ற நிறத்தைத் தேர்வு செய்வது முக்கியம். ஃபவுண்டேஷன் மேல் 'லூஸ் பவுடர்' அப்லை செய்வேன்.
Manimegalai with her Husband Hussain
Advertisment
Advertisement
அதன்பிறகு, கண்களை அழகாக்க eye shadow. பிறகு ஜெல் ஐ லைனர் போடுவேன். இதுதான் என்னுடைய ஃபேவரைட். எப்போதும் இந்த ஜெல் லைனர் உபயோகப்படுத்தும் காற்று புகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த ஜெல் லைனர் கண்களைவிட்டு ஸ்மட்ஜ் ஆகாது. லைனர் போட்டபிறகு கண்களுக்குக் கீழ் இருக்கும் கருமையை மறைக்க கரரெக்டர் போட்டு, மீண்டும் ஃபவுண்டேஷன் அப்லை செய்யவேண்டும்.
Manimegalai in Cook with Comali
அடுத்ததாக மஸ்காரா மற்றும் eye brow போடுவேன். எனக்கு மெல்லிய புருவம் என்பதால், அதிகப்படியாகத் தீட்டுவேன். லிப்ஸ்டிக் பொறுத்தவரைக்கும் நியூட் ஷேடுகள்தான் என்னுடைய சாய்ஸ். அடுத்தது கொஞ்சமாக ப்ளஷ் செய்தால் அவ்வளவுதான், சூப்பர்கூல் லுக் ரெடி. தேவைப்பட்டால் முகத்தை ஹயிலைட்டாக காண்பிக்க கான்டூர் உபயோகிப்பேன். எந்தவகை மேக் அப் பொருள்கள் உபயோகித்தாலும், மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தவேண்டும். அதுதான் முக்கியம் பாஸ்!"
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil