சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிட விரும்புபவர்களுக்கு அருமையான ஈஸியான ரெசிபி ஒன்றை பகிர்ந்துள்ளார் குக் வித் கோமாளி போட்டியாளர் பிரியங்கா. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
முருங்கைக் கீரை மற்றும் வாழைப்பூவை யாரும் எளிதில் சாப்பிட விரும்ப மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் சுவையான குழிப் பணியாரமாக செய்து கொடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் குக் வித் கோமாளி போட்டியாளர் பிரியங்கா தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ள வீடியோவை இப்போது பார்ப்போம்.
முதலில் முருங்கை இலையை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின்னர் வாழைப்பூவை நறுக்கி தண்ணீர் போட்டு, சிறிதளவு எலுமிச்சை சாறு ஊற்றி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை உறித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் முருங்கை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பை பற்ற வைத்து, வாணலியை அதில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி கொள்ளவும்.
நன்றாக வதங்கியதும் முருங்கை கீரையைப் போட்டு வதக்கவும். பின்னர் வாழைப்பூவை போட்டு வதக்கவும். அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக வதங்கிய உடன் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து மீண்டும் வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பவுலில் ரவா- தோசை மாவைப் போட்டு, சிறிதளவு சோடா உப்பு சேர்த்து, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் புளி, பூண்டு, பெருங்காயம், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுவையான பச்சப்புளி சட்னி ரெடி.
அடுத்து பனியாரச் சட்டியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளவும். பின்னர் பாதியளவு மாவும், அதன் மேல் வதக்கிய முருங்கை இலையை போட்டு வேக வைக்கவும்.
சூப்பரான குழிப் பணியாரம் ரெடி. பச்சபுளி சட்னி சேர்த்து குழிப் பணியாரத்தை டேஸ்ட் பாருங்கள். அப்பறம் என்ன நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“