Cook with Comali Pugazh Parattai Pugazh Yooutube Channel : ஒரேயொரு ரியாலிட்டி ஷோதான்.. யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்கு மக்கள் மனதை வென்றிருக்கிறார் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் ஃபேவரைட் கோமாளியாக கடந்த இரண்டு சீசன்களாக கலக்கிக்கொண்டிருக்கிறார் புகழ். இன்றுடன் இரண்டாம் சீசன் நிறைவடையும் வேளையில், தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் புகழின் அட்ராசித்திகள் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
Advertisment
'பரட்டை புகழ்' எனும் பெயரில் இருக்கும் இவருடைய யூடியூப் சேனலில் 50-க்கும் குறைவான வீடியோக்களே இதுவரை பதிவேற்றப்பட்டிருக்கிறது. தொடங்கப்பட்டு மூன்றே மாதங்களில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்களை பெற இருக்கிறார். இவருடைய உடல் மொழி மற்றும் டைமிங் காமெடிகளுக்காகவே ஏராளமான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்த வாஷிங்க்டன் சுந்தருடனான நகைச்சுவையான நேர்காணல், குக் வித் கோமாளி டீமுடனான கலாட்டா, ஜிம் அட்ராசித்திகள் என சுவாரசியமான பதிவுகள் இவருடைய பக்கத்தில் ஏராளம். ஷிவாங்கியுடனான சுற்றுலா, ஜிம் ஒர்க்அவுட், புதிய கார் வாங்கியபோது பதிவேற்றப்பட்ட காணொளி உள்ளிட்ட காணொளிகள் மில்லியன் வியூஸ்களை தாண்டி சென்றுகொண்டிருக்கின்றன.
குக் வித் கோமாளி இரண்டாம் சீசன் நிறைவடைந்தாலும்,இவருடைய சேனலில் எப்போதுமே மக்களை என்டர்டெயின் செய்துகொண்டிருப்பர் என்பதில் சந்தேகமே இல்லை. ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்துகொண்டிருக்கும் புகழுக்கு நம் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil