சமையல், காமெடி, நேர்காணல்.. ஷகிலாவின் யூடியூப் சேனலில் என்ன ஸ்பெஷல்?
Cook with Comali Shakila Youtube Channel Review ரெசிபி மற்றும் நகைச்சுவை கன்டென்ட்டுகள் பார்க்க விரும்பினால், நிச்சயம் ஷகிலாவின் 'தி ஷகிலா' சேனலை தேர்ந்தெடுக்கலாம்.
Cook with Comali Shakila Youtube Channel Review : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தன் மீது இருந்த பிம்பத்தை உடைத்த ஷகீலா, இப்போது தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதில் ஏராளமான ரசிகர்களைப் பெற்று வருகிறார். மூன்று மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த இவருடைய யூடியூப் சேனலில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். அப்படி என்னவெல்லாம் இவருடைய சேனலில் இருக்கிறது?
Advertisment
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்த ஷகீலா, தனக்கு தெரிந்த வித்தியாச ரெசிபிக்களை அவருடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு வருகிறார். தான் மட்டுமல்லாமல், தன்னுடன் தன் மக்கள் மிளா, நாஞ்சில் விஜயனோடு சொதப்பலாகச் செய்த பிரியாணி என வகை வகையான ரெசிபிக்களை அப்லோட் செய்திருக்கிறார்.
Advertisment
Advertisements
தனக்கு மிகவும் பிடித்த கேமிங், ஜுராசிக் நந்தா எனும் நகைச்சுவை சீரிஸ், குக் வித் கோமாளி போட்டியாளர்களுடன் நடனம் என ஏராளமான என்டெர்டெயினிங் வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். பிறகு, குக் வித் கோமாளி போட்டியாளர்கள் ஒவ்வொருவருடனும் தனிப்பட்ட வகையில் நேர்காணல் ஒன்றை எடுத்தும் பதிவிட்டுள்ளார்.
இதுவரை பதிவேற்றப்பட்ட காணொளிகளில் ஏராளமான வீடியோக்கள், லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளன. விதவிதமான ரெசிபி மற்றும் நகைச்சுவை கன்டென்ட்டுகள் பார்க்க விரும்பினால், நிச்சயம் ஷகிலாவின் 'தி ஷகிலா' சேனலை தேர்ந்தெடுக்கலாம். விரைவில் இன்னும் ஏராளமான Vlog வீடியோக்களை பதிவேற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil