பாட்டு மட்டுமல்ல எல்லாமே இருக்கு – ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி யூடியூப் அட்ராசிட்டிஸ்!

Cook with Comali Shivangi Krishnakumar Youtube இவர் அப்லோட் செய்த வீடியோக்கள் மிகக் குறைவுதான். ஆனால், ஒவ்வொன்றும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

Cook with Comali Shivangi krishnakumar Youtube Channel Tamil

Cook with Comali Shivangi krishnakumar Youtube Channel Tamil : பாட்டு பாடத்தான் திரையில் தோன்றினார். ஆனால், யாரும் எதிர்பார்த்திடாத அளவிற்குப் பாடல்களைவிட நகைச்சுவையில்தான் இவருடைய குரல் அதிகம் ஒலித்துக்கொண்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஹீரோயின் இவர்தான். ஜெனிலியாவுக்கு அடுத்தபடியாக கியூட் கேட்டகிரியில் இளைஞர்கள் மனதை வென்றிருக்கும் ஷிவாங்கி, தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனல் தொடங்கி, அதன்மூலம் மக்களை சந்தித்து வருகிறார்.

Shivangi Krishnakumar

ஒரு வருடத்திற்கு முன்பே ஷிவாங்கி கிருஷ்ணகுமார் எனும் தன்னுடைய முழு பெயரில் சேனலை தொடங்கிவிட்டார். அவ்வப்போது பாடல்களைப் பாடி பதிவு செய்து வந்தார். அதற்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்றாலும், தன் அம்மாவோடு இணைந்து ‘ஜிமிக்கி கம்மல்’ எனும் Vlog விடியோதான் இவருடைய சேனலை அடுத்தாக கட்டத்திற்கு நகர்த்தி சென்றது.

விதவிதமான கம்மல்களை வைத்து இரண்டு நீள எபிசோடுகள். அதில் அம்மாவும் மகளும் இணைந்து சுவாரசிய உரையாடல்கள் என வைரலானது. பிறகு குக் வித் கோமாளி நண்பர்களோடு ஜாலியான Vlog, , ஷாப்பிங் அட்ராசிட்டிஸ், பொங்கல் கொண்டாட்டங்கள் என ஏகப்பட்ட ஃபன் வீடியோக்கள் இவருடைய சேனலில் காணலாம்.

வழக்கமாக தங்களின் வீட்டையும், சமையலறையையும் ‘ஹோம் டூர்’, ‘கிச்சன் டூர்’ என்கிற பெயரில் பெரும்பாலான பிரபலங்கள் சுற்றிக்காட்டுவார்கள். ஆனால், ஷிவாங்கியோ தன ஃபிரிட்ஜை சுற்றிக் காட்டி 5.5 மில்லியன் வியூஸ்களை பெற்று ட்ரெண்டானார். தற்போது வரை 1.2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்க்கு மேல் ஷிவாங்கியின் இந்த சேனலை பின்தொடர்கிறார்கள். இவர் அப்லோட் செய்த வீடியோக்கள் மிகக் குறைவுதான். ஆனால், ஒவ்வொன்றும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cook with comali shivangi krishnakumar youtube channel tamil

Next Story
இம்யூனிட்டி, எடை குறைப்பு… வீட்டில் சுத்தமான வெண்ணை தயார் செய்வது எப்படி?Healthy food Tamil News: how to make homemade desi makhan or white butter
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express