Cook with Comali Shivangi Youtube Channel Fun Video Tamil News : மிகக் குறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் ஷிவாங்கி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் திரையில் தோன்றினாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இவருக்கு மிகப் பெரிய மைல் கல். முதல் மற்றும் இரண்டாம் சீசனில் இவருடைய பங்களிப்பு, டிஆர்பி ரேட்டிங்கை உயர வைத்தது. அதிலும் குறிப்பாக சக போட்டியாளரான அஸ்வின் மற்றும் புகழோடு இணைந்து இவர் செய்திருக்கும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லை. இவரால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது என்று பெண்களும் வியக்கும் அளவிற்குக் கலக்கிய இவருடைய சென்ஸ் ஆஃப் ஹியூமர் எங்கிருந்து வந்தது என்பது தெரிந்துவிட்டது.

‘ஷிவாங்கி கிருஷ்ணகுமார்; எனத் தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த ஷிவாங்கிக்கு 1.52 மில்லயன் சப்ஸ்க்ரைபர்ஸ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லையென்றாலும், அவருடைய சேனல் வாயிலாக மக்களை சந்தித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி தன் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை அப்லோட் செய்திருந்தார் ஷிவாங்கி. அதில் ஷிவாங்கியின் குறும்புத்தனம் எங்கிருந்தது வந்தது என்பதை காண முடிந்தது.

ரசிகர்களிடமிருந்து விதவிதமான கேக் வகைகளை, ஷிவாங்கி அம்மாவின் கர்னாட சங்கீத பாடலோடு (ஹாப்பி பர்த்டே ஆங்கில பாடல்தான்) வெட்டி ஊட்டிக்கொண்டனர். பிறகு, தனக்கு மிகவும் பிடித்த பழம்புரி ரெசிபியை அவருடைய தாயின் உதவியோடு நமக்கும் செய்து காட்டினார் ஷிவாங்கி. அதன்பிறகுதான் மினி குக் வித் கோமாளி, இல்லை இல்லை கோமாளி வித் கோமாளி நிகழ்ச்சி என்று தெரிந்தது.

“என் அம்மா சுமாரான குக்தான்” என்று ஷிவாங்கி கலாய்க்க, “அப்படியெல்லாம் இல்லை” என்று சோறு கிடைக்காமல் போய்விடுமோ என்ற வருத்தத்தில் மனைவிக்கு சப்போர்ட் செய்தார் ஷிவாங்கி அப்பா. இவை எல்லாவற்றையும்விட, பாத்திரத்தின் பெயரைத் தமிழில் ‘பவுல்’ என்று ஷிவாங்கி சொன்னதெல்லாம் வேற லெவல். அதேபோல, பழம்புரி செய்ய எந்த பதத்தில் மாவை கரைத்துக்கொள்ளவேண்டும் என்று ஷிவாங்கி கேட்டதற்கு, “அதெல்லாம் தெரியாது.. இதோ இந்த பதம்” என்று ஷிவாங்கி அம்மா காட்டியதெல்லாம் நகைச்சுவையின் உச்சம்.
அம்மா-பொண்ணு காம்போவில் ஒருவழியாக பழம்புரி செய்துவிட்டனர். அதனை, ‘சூப்பர் சூப்பர்’ என்று சாப்பிட்டது அப்பாவி அப்பா. தம்பி சாப்பிடக்கூட இல்லை. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஷிவாங்கிக்காக ஸ்பெஷல் கேக் ஒன்றை அனுப்ப, அதைப் பார்த்த அவருக்கு ஒரே கொண்டாட்டம்தான். மேலும், மற்றொரு பேக்கரியிலிருந்து சிறப்பு கேக் ஒன்றும் வந்தது. எல்லாவற்றையும் பார்த்த ஷிவாங்கி, மகிழ்ச்சியில் சொல்வதற்கு வார்த்தைகள் இன்றி தவித்தார். நன்றியைத் தவிர வேறு எதுவும் வரவுமில்லை. இந்த குறிப்பிட்ட காணொளி, 2.5 மில்லியன் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil