Cook with Comali Sivangi Latest Viral Youtube Video Tamil news : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகிக்கான போட்டியாளராக அறிமுகமான ஷிவாங்கி, தமிழ்நாட்டு மக்களின் ஃபேவரைட் பிரபலமாக தற்போது இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருடைய நகைச்சுவை உணர்வு அனைவர்க்கும் பிடித்துப்போக, இன்ஸ்டாகிராம், யூடியூப் என அணைத்து சமூக வலைத்தளங்களிலும் மில்லியன் கணக்கான மக்களால் பின்பற்றப்படுகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இவர் அப்லாட் செய்த காணொளி, 8 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அப்படி என்ன ஸ்பெஷல் அந்த காணொளியில்?

பாட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்றடைந்த ஷிவாங்கி, அங்கே திங்களூர் எனும் இடத்தில் பாரம்பரிய அம்சங்கள் நிறைந்த ஓர் விருந்தினர் விடுதியில் தங்கி இருக்கிறார். அட! இந்த வீடு மிகவும் அழகாக இருக்கிறதே! இதையே ஏன் ஹோம் டூர் வீடியோவாக மாற்றிவிடக்கூடாது? என்று எண்ணிய அவர், காணொளியாகப் பதிவு செய்யத் தொடங்கினார்.

காணொளியில் ஆரம்பத்திலேயே அவருக்கு உதவி செய்யும் சிறுவர்களை அறிமுகப்படுத்தினார். பிறகு, “இதுபோன்ற வீடு சென்னையில் எங்கேயும் பார்க்கவே முடியாது. கண்டிப்பாக இது வித்தியாசமாக இருக்கும். இந்த வீடெல்லாம் பள்ளி படிக்கும் காலத்தில் சுற்றுலாவின்போது, இதுதான் பாரம்பரியமான வீடு என்று ஆசிரியர்கள் கூறுவார்கள். அப்போது பேருந்தில் போகிற போக்கில் பார்த்ததுதான். அதற்கு அப்புறம் இப்போதுதான் பார்க்கிறேன்” என்று அவருடைய கியூட் பாணியில் கூறி வீட்டிற்குள் கூட்டிச் சென்றார் ஷிவாங்கி.

வீட்டு வாயில், கார் நிறுத்துமிடம் எனப் பழைய காலத்து வீட்டைப் புதுப்பித்து இருந்தனர். மண்வாசனை நிறைந்திருக்கும் அந்த வீட்டின் நடுவில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் மீது அமர்ந்து சிறிது நேரம் ஆடி மகிழ்ந்தவர், பிறகு மரத்தாலான சோபா, நாற்காலி, கயிற்றுக் கட்டில் ஆகியவற்றையும் காட்டிவிட்டு சமையலறையில் இருக்கும்அரிவாள்மனை, சோம்பு உள்ளிட்ட பழங்கால பொருள்களைக் காண்பித்தார். பிறகு மிக முக்கியமாக, அங்கே பொருத்தப்பட்டிருக்கும் CCTV-யை இணைத்திருக்கும் கணினியையும் காட்டினார்.

பிறகு, அங்கிருந்த பழங்காலத்து டெலிபோன், சிறிய கப்போர்டு, ஜன்னல் ஆகியவற்றைக் காண்பித்தார். உண்மையில் அதுபோன்ற அமைப்புகள் கொண்ட வீட்டை பார்ப்பதே அழகு. “சினிமாவுல பார்க்குற செட் வீடு போலவே இது இருக்கு. ஆனால், இது உண்மையான வீடு!” என்று .தன்னுடைய அதே ஸ்டைலில் பகிர்ந்துகொண்டார் ஷிவாங்கி.
இறுதியாகத் தான் தங்கியிருக்கும் மொட்டைமாடியில் உள்ள அந்த சிறிய அறையைச் சுற்றிக்காட்டிவிட்டு, மொட்டைமாடியில் அழகை ரசித்தபடி விடைபெற்றார் ஷிவாங்கி. இவருடைய இந்த வீடியோவில் மற்ற காணொளி போல் சினிமா கவுன்ட்டர்கள் எதுவும் இல்லை என்றாலும், அவருடைய பேசும் ஸ்டைலுக்கே லைக்ஸ் குவிந்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil