Advertisment

இன்டெர்மிட்டன்ட் டயட், முட்டை சாண்ட்விச், எலுமிச்சை - குக் வித் கோமாளி சுனிதா டயட் வைரல் வீடியோ!

Cook with Comali Sunita Diet Viral Video Tamil News ஆம், ஓசியில் கொடுத்தால் அப்படிதானே இருக்கும் என்று மீண்டும் அவரையே கலாய்த்துக்கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cook with Comali Sunita Diet Viral Video Tamil News

Cook with Comali Sunita Diet Viral Video Tamil News

Cook with Comali Sunita Diet Viral Video Tamil News : ஹோம் டூர், ஃப்ரிட்ஜ் டூர் வரிசையில் அடுத்ததாக இணைந்திருப்பது, 'ஒரு நாளில் சாப்பிடுவது என்னென்ன?'. ஆம், யூடியூப் சேனல் வைத்திருக்கும் பிரபலங்கள் பலரும் தாங்கள் பின்பற்றும் டயட், அவர்கள் ஒருநாளில் என்னவெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்பதை காணொளியாக பதிவு செய்து, அதனை வெளியிட்டு வருகின்றனர். பிக் பாஸ் சம்யுக்தா, அனிதா சம்பத் வரிசையில், சமீபத்தில் விஜய் டிவி சுனிதாவும் தன்னுடைய டயட்டை பகிர்ந்திருக்கிறார்.

Advertisment
publive-image

"நான் காலை எழுந்ததும் பிளாக் காபி குடிப்பேன்" என்றபடி காலை 11 மணிக்கு எழுந்து காபி போட சென்றார். இப்படியெல்லாம் ஷூட் செய்யும்போது மட்டும்தான் கிச்சன் பக்கம் போவேன் என்கிற டிஸ்க்ளைமரையும் சேர்க்க மறக்கவில்லை. பிறகு அவரே அந்த பிளாக் காபியை செய்து குடித்தபடி, எப்போதுமே எதையாவது குடித்துக்கொண்டே இருப்பது மிகவும் பிடிக்கும் என்று பகிர்ந்துகொண்டார்.

publive-image

நான் இன்டெர்மிட்டன்ட் டயட் இருப்பதனால், எனக்கு பிரேக்ஃபாஸ்ட் கிடையாது. நேரடியாக லன்ச்தான் சாப்பிடுவேன். அந்த வரிசையில் இன்றைக்கு வெள்ளை முட்டை சாண்ட்விச் சாப்பிடப் போகிறேன். ப்ரெடில் இருக்கும் கார்ப் கொஞ்சம், வெள்ளை முட்டையின் புரதம் என இதில் இருக்கும் சத்துகள் போதுமானது. ஆனால், எனக்கு மஞ்சள் கரு மிகவும் பிடிக்கும். அதனால், அவ்வப்போது வெள்ளை பகுதிகளை அரைக்கும்போது கொஞ்சம் மஞ்சள் கருவையும் சேர்த்துக் கொள்வேன்" என்றபடி சுனிதா அவரையே குறை கூறிக்கொண்டிருந்தார்.

publive-image

பிறகு, பிரெட் வைத்து அதில் இரண்டு விதமான சாஸ் சேர்த்து, அதன்மேல் வேகவைத்து அரைத்த முட்டையைச் சேர்த்து சாண்ட்விச் செய்தார். இந்த எளிமையான சாண்ட்விச்சை செய்து முடித்து, அவருடைய பாணியில் தன்னைத்தானே செஃப் என்று கூறிக்கொண்டது கியூட். பிறகு அந்த பிரெட்டை க்ரிலில் வைத்து, டோஸ்ட் செய்தார். அதிலும் எப்படி செய்வது என்பதில் குழப்பம். ஆம், ஓசியில் கொடுத்தால் அப்படிதானே இருக்கும் என்று மீண்டும் அவரையே கலாய்த்துக்கொண்டார்.

பிறகு மாலை 5 மணிக்கு, எல்லா விதமான உண்ணும் விதைகள் மற்றும் டேட்ஸ் ஒன்றாக சேர்த்தபடி சாப்பிட்டார். சாப்பிட்டுக்கொண்டே அந்த நாள் மற்றும் அடுத்த நாள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப்பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பாராம். இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு டின்னர். அதற்கு இரண்டு சப்பாத்தி, பனீர் மசாலா கூடவே அவர் ஊர் வழக்கப்படி எலுமிச்சையையும் பிழிந்து சாப்பிட்டார். சாப்பிட்டு 4 மணி நேரம் கழித்துத்தான் தூங்குவாராம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cook With Comali Sunita
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment