Cook with Comali Sunita Latest Video Night Life : விதவிதமான காணொளிகளை எடுத்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அப்லோட் செய்து வரும் சுனிதா, சமீபத்தில் மிகவும் வித்தியாசமான வீடியோவை பதிவேற்றியுள்ளார். நைட் லைஃப் எனப்படும் ஒருவித வாழ்வியலைப் பதிவு செய்து அதுவும் பெங்களூரிலிருந்து ரெக்கார்ட் செய்து நமக்காகப் பகிர்ந்துள்ளார். பிரபலங்களின் வாழ்வியலைத் தெரிந்துகொள்ள முனைப்போடு இருக்கும் மக்களுக்கு இந்த வித்தியாச காணொளி அதிக வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
“கமல் சாரும் ஜோ மேமும் ‘மஞ்சள் வெயில் மாலையிலே..’ என பாடிச் செல்வார்களே அதுபோன்ற ஒரு உலகம் நம்ம இந்தியாவில் இருக்கும் என்றால் அது பெங்களூரு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நான் அனுபவித்து உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்” என்றபடி தன்னுடைய வழக்கமான தவறான தமிழில் பகிர்ந்துகொண்டார் சுனிதா.
“கம்யூனிட்டி ஹால் முன்பு இருக்கிறேன். நம்ம பாஷையிலே சொல்லனும்னா சரக்கு புழங்குகின்ற இடம். இன்றைக்கு இரவு முழுவதும் இங்குள்ள சாலைகளைத்தான் நாம் எக்ஸ்ப்ளோர் .செய்யப் போகிறோம். அதில் முதலாவது பிரிகேட் ரோட் பார்க்கலாம். இது 1990-ம் ஆண்டிலிருந்து ஷாப்பிங்கிற்காக பேர்போன சாலை. இங்கு எல்லா டாப் பிராண்டுகளும் இருக்கும். இங்கு இரவில்தான் கூட்டம் அலைமோதும். இதனாலேயே வெளிநாட்டில் இருப்பது போல ஒரு ஃபீல் வருகிறது.
சாலைகளில் ஆடுவது பாடுவது எல்லாம் சினிமாவில் காட்டித்தான் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் முதல் முறையாக இன்குப் பார்க்கிறேன். நான், சாண்டி எல்லாம் ஒருமுறை வெளிநாட்டிற்குச் சென்றபோது இப்படி ஆடினோம். அது எனக்கு இப்போது ஞாபகம் வந்துவிட்டது” என்றபடி அடுத்ததாக அவருடைய உருவத்தை ஸ்கெட்ச்சிங் செய்வதற்காகத் தயாரானார்.
எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகாவை பென்சிலில் வரைந்து கொடுப்பாரே ஒரு பெரியவர், அதேபோன்ற நிகழ்வுதான் நடந்தது. அதற்காக சுனிதா கஷ்டப்பட்டு சிரிக்காமல் அமர்ந்து போஸ் கொடுத்ததை நிச்சயம் பாராட்டி ஆகவேண்டும். பிறகு அவருடைய தீவிர ரசிகர்கள் எல்லாம் அவரை கண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அடுத்த குக் வித் கோமாளி சீசன் வருகிற ஜனவரி முதல் வரவிருக்கிறது என்கிற தகவலையும் அவர்களோடு பகிர்ந்துகொண்டார். இருக்கு, பெரிய சம்பவம் இருக்கு
பிறகு, “இங்கு சரக்கு அடிக்குறவங்களுக்கு நல்ல இடம். 99 ரூபாயிலிருந்து இங்கு சரக்கு கிடைக்கும். ஆனால், குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு. ஆனாலும், குடிக்கவேண்டும் என்று நினைத்தால் இங்கு நன்றாக என்ஜாய் பண்ணலாம். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ஹார்ட்ராக் கெஃபி ஷாப் இங்கு உள்ளது. இங்கு மட்டும்தான், காபி கடையில் சரக்கும் கொடுப்பாங்க. இது பெரிய பெரிய சிட்டியில் மிகவும் ஃபேமஸ். அதனால், இந்த கடைக்குப் போனால் காபியும் குடிக்கலாம் சரக்கும் குடிக்கலாம். இல்லையென்றால் ரெண்டும் சேர்ந்தும் குடிக்கலாம். ஆனால், நான் போனதே இல்லை” என்கிறார். இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil