Cook with Comali Sunitha Viral Youtube Video Tamil News : வட இந்தியாவிலிருந்து தமிழகம் வந்து, பல இளைஞர்களின் மனதை வென்றிருக்கும் சுனிதா, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலை ஆரம்பித்து, அதில் ஏராளமான சுவாரசிய காணொளிகளை அப்டேட் செய்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தன்னுடைய அரைகுறை தமிழ் மொழியால் பலரையும் ஈர்த்தவர், சமூக வலைத்தளங்களிலும் அவ்வப்போது ட்ரெண்டிங்கில் வருவதுண்டு. அந்த வரிசையில் சமீபத்தில் அவர் பதிவேற்றிய வீடியோ வைரல் ஹிட். எந்த வேலையும் இல்லாமல் தன்னுடைய வெட்டியான நேரத்தில் என்ன செய்வார் என்பதுதான் அந்த காணொளி.

வெட்டியாக இருந்தாலும் நிச்சயம் மேக்-அப் இருக்கும் என்கிற குறிப்போடு இந்தக் காணொளியை ஆரம்பித்தார் சுனிதா. வெட்டியான நேரம் இருந்தால் சுனிதா கையில் எடுப்பது அவருடைய மொபைலைதான். பெரிய கண்டுபிடிப்பு என்று திட்டுவது காதில் விழுகிறது. அதாவது மொபைல் எடுத்து ரீல்ஸ் செய்வாராம். அதுவும் தனியாக செய்ய மாட்டார். தனக்கென ஒரு பார்ட்னர் இருக்கிறார். அவரைத்தான் தன்னோடு இணைத்துக் கொள்வாராம். அப்படி யார் அந்த பார்ட்னர் என்றால், டிக் டாக் ரிங். லைட் செட் அப்புடன் வரும் அந்த சாதனத்தை பயன்படுத்தித்தான் நடு இரவில் வீடியோக்களை பதிவு செய்து, ஒவ்வொன்றாக போஸ்ட் செய்வாராம் சுனிதா. அதுதான் சுனிதாவின் பாய்ஃபிரெண்டாம். அப்படியே ஒரு ரீல்ஸ் வீடியோவும் நம் முன்பே செய்து காட்டினார்.
அடுத்ததாக கைகளில் க்ளவுஸ் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்து வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார். அப்போதும், சென்னை கார்பொரேஷன் குப்பை அள்ளும் வண்டி ஒளிபரப்பும் பாடலை தன் இஷ்டத்துக்குப் பாடி மகிழ்ந்துகொண்டிருந்தார் சுனிதா. பிறகு, டிவியில் சீரிஸ் பார்ப்பதை வழக்கமாக்கிக்கொண்டதையும் பகிர்ந்துகொண்டார். ஆனால், என்ன நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்த ‘மணி ஹெயிஸ்ட்’ சீரிஸைதான் அவர் இப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறாராம். அதுவும் பார்த்து முடிக்க முடியவில்லை என்று ஃபீலிங்ஸ் வேறு. அதுமட்டுமின்றி நம்மையும் சீரிஸ் பார்க்கச் சொல்லி ரெக்கமண்ட் செய்தார்.
அடுத்ததாக, தான் வளர்க்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, அதற்கு உணவளித்துக்கொண்டிருந்தார். பச்சை நிறம் கண்களுக்கு குளிர்ச்சி என்றும் எப்போதும் வீட்டில் இப்படி செடி வளர்த்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பகிர்ந்துகொண்டார் சுனிதா. இறுதியாக, மொட்டைமாடியில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடைப்பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடிக்குமாம். இது எல்லாவற்றையும் விடப் படுத்துத் தூங்குவதுதான் வெட்டியாக இருக்கும் நேரங்களில் இவருக்குப் பிரதான வேலை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil