Cook with Comali Sunitha Viral Youtube Video latest Tamil news : ‘மழை அடித்தாலும் சரி வெயில் அடித்தாலும் சரி மேக்-அப் மட்டும் சரியாகப் போட்டுக்கொள்ளவேண்டும்’ என்று சுனிதா கூறி ஆரம்பமாகிறது இந்த முழு நீள நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் க்ளைமாக்ஸ் காணொளி. தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் நகைச்சுவையான பல வீடியோக்களை அப்லோட் செய்து மக்களை என்டெர்டெயின் செய்து வருகிறார் குக் வித் கோமாளி சுனிதா. அந்த வரிசையில், மழை நாளில் என்ன செய்வார் என்பதை கவர் செய்திருக்கிறார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கும் இந்த காணொளியில் என்ன ஸ்பெஷல்?
காலையிலேயே மேக்-அப் போட்டு ஷூட்டிங்கிற்கு ரெடியானால், மழை காரணத்தினால் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட, ஷூட்டிங் ஸ்பாட்டை கவர் செய்யலாம் என்ற நோக்கத்தில் கேமரா மேனை கூப்பிட்டு இப்போது அந்த பிளான் மாறியதால், மழைக்காலத்தில் வீட்டில் என்ன செய்யப்போகிறார் என்பதைக் காணொளியாகப் பதிவு செய்தார் சுனிதா.
“மழை எல்லாம் பெய்து ரொமான்ட்டிக்காக இருக்கும்போது, பக்கத்தில் ஆள்தான் இல்லை. ஆனாலும் பரவாயில்லை என் தங்கை இருக்கிறார். அவரை வைத்து ஏதாவது கன்டென்ட் செய்யலாம்” என்றபடி தன்னுடைய தங்கை மஞ்சுளாவை நோக்கி நகர்ந்தார். போன வேகத்தில் மின்சாரம் கட்டாக, அதற்காகவும் சிறிது நேரம் காத்திருக்கின்றனர். ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது!
கன்டென்ட் தரவேண்டும் என்றால் தனக்கு டீயுடன் பஜ்ஜியும் வேண்டும் என்று மஞ்சுளா டிமாண்ட் செய்ய, அவற்றை ஆர்டர் செய்து கொடுத்தார். பிறகு கேம் விளையாடலாமா அல்லது ரீல்ஸ் செய்யலாமா என்று விவாதங்கள் சென்றன. இறுதியாக சீட்டுக்கட்டு விளையாடலாம் என்று முடிவு செய்து, பிறகு டாக்டர் திரைப்படத்தில் யோகி பாபுவின் கையை உடைக்கும் விளையாட்டை முயற்சி செய்தனர் சுனிதாவும் மஞ்சுளாவும்.
பிறகு சீட்டுக்கட்டை வைத்து புதுவிதமான டேர் கேம் விளையாடினார்கள் இந்த சகோதரிகள். பிறகு பஜ்ஜியை டெலிவரி செய்த நபர், ஏராளமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூற, தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம் என்று சாலையில் இருந்த சிலருக்கு இருவரும் உணவு வாங்கி கொடுத்தனர். ஆனால் என்ன, போகிற வழியில் வசீகரா பாடலை பாடி கொன்றுவிட்டார் சுனிதா. அதைத் தவிர்த்திருக்கலாம்.
என்றாலும், தன்னால் முடிந்த உதவியை செய்ததோடு, மக்களையும் தங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள் என்று வேண்டி காணொளியை நிறைவு செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil