Advertisment

காருக்குள் டஸ்ட்பின், பிடிக்காத ஸ்டியரிங், எப்போதும் காத்திருக்கும் சுனிதாவின் வைரல் வீடியோ!

Cook with Comali Sunitha Viral Youtube Video Tamil எனக்கு சுத்தமாக இருப்பது அவசியம். அதனால், என் காருக்குள் எந்தவிதமான குப்பையும் இருக்கக்கூடாது என்பதற்காக, உள்ளுக்குள்ளேயே சிறிய டஸ்ட் பின் வைத்திருக்கிறேன்.

author-image
WebDesk
New Update
Cook with Comali Sunitha Viral Youtube Video Tamil

Cook with Comali Sunitha Viral Youtube Video Tamil

Cook with Comali Sunitha Viral Youtube Video Tamil : வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தன் கொஞ்சும் தமிழில் இங்குள்ள மக்களைக் கட்டிப்போட்டிருப்பவர் சுனிதா. தன் நடன அசைவால் ஈர்த்தவர் தற்போது தனக்கென தனிப்பட்ட வகையில் ஆரம்பித்த யூடியூப் சேனல் வழியே அவ்வப்போது மக்களை சந்தித்து வருகிறார். ஏராளமான என்டெர்டெயினிங் கன்டென்ட் கொடுத்து, எப்போதும் ட்ரெண்டிங்கில் இவருடைய வீடியோக்கள் வருவதுண்டு. அந்த வரிசையில் தன்னுடைய கண்மணியின் (அதுதான் அவருடைய செல்லமான காரின் பெயர்), பயணத்தை காணொளியாக்கி பதிவிட்டுள்ளார். அதில் ஏராளமான சுவாரசிய விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

Advertisment

"என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்ட் என்னுடைய கண்மணிதான். இந்த காரை மனிதரை போலதான் பார்த்துக்கொள்வேன். அப்படிப்பட்ட என்னுடைய இந்த கண்மணியை நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். இந்த ப்ராண்ட் பெயர் பிரீஸா. எனக்கு பிங்க் நிறம் பிடித்தாலும், சிவப்பு நிறம்தான் பளீச்சென தெரியும் என்பதால், என்னுடைய காரை சிவப்பு நிறத்தில் வாங்கிவிட்டேன்" என்று படபடவென தொடங்கி மேலும் சில சுவாரசிய சம்பவங்களையும் கூறினார்.

publive-image

"பொதுவாக பெரும்பாலான இளைஞர்கள் கார் வாங்கியதும் அவர்களுக்குப் பிடித்தது போல டிசைன் செய்து கொள்வார்கள். ஆனால், நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வாங்கினேனோ அப்படியேதான் இப்பொழுதும் என் காரை வைத்திருக்கிறேன். ஒரு சின்ன மாற்றத்தைக்கூடச் செய்யவில்லை. அவ்வளவு ஏன் விண்டோ ஷீல்டு மேல் இருக்கும் கவரை கூட பிரிக்கவில்லை" என்றபடி அதனை ஜூம் செய்து காட்டினார் சுனிதா. அடுத்ததாக இன்டீரியர் வேலைப்பாடுகள் பற்றி பகிர்ந்துகொண்டார்.

publive-image

"ட்ரைவின் தெரிந்ததுபோல சீன போடுவேன் ஆனால், உண்மையில் எனக்கு கார் ஓட்ட தெரியாது. இந்த வண்டியில் எனக்கு தெரிஞ்ச ஒரே விஷயம் ஹாரன் அடிப்பதுதான். இந்த வண்டிக்கேன முதல் முறையாக நான் வாங்கியது குட்டி பிள்ளையார் ஸ்டிக்கர்தான். மேலும், எனக்கு சுத்தமாக இருப்பது அவசியம். அதனால், என் காருக்குள் எந்தவிதமான குப்பையும் இருக்கக்கூடாது என்பதற்காக, உள்ளுக்குள்ளேயே சிறிய டஸ்ட் பின் வைத்திருக்கிறேன்.

இந்த கார்தான் எனக்கு எல்லாமே. நீண்ட தூர பயணம் மற்றும் ஷூட்டிங் முடிந்து டயர்டாக இருக்கும் வேளையிலும் இதில்தான் படுத்துத் தூங்குவேன். மேக்-அப் போடுவது முதல் என்னுடைய அவ்வளவு பெரிய லக்ஜேஜுகளை சுமப்பது வரை எனக்கென அத்தனையையும் செய்வதற்கு என் கண்மணி உள்ளது. ஆகமொத்தத்தில் இது என் நண்பேன்டா. எனக்கு எவ்வளவு திருஷ்டி வேண்டுமானாலும் படலாம் ஆனால், என் வண்டிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது" என்றபடி தன்னுடைய ட்ரைவருக்காக காத்திருந்தார்.

"பொதுவாக ட்ரைவர்தான் காத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், என்னுடைய விஷயத்தில் எப்போதும் நான்தான் டிரைவருக்கு காத்திருப்பேன். அதிலும், இந்த காரில் எனக்கு பிடிக்காத பகுதி என் ட்ரைவர் கிழித்து வாய்த்த இந்த ஸ்டியரிங் பகுதி. இந்த பகுதி மட்டும்தான் என் கன்ட்ரோலில் இல்லாத பகுதி" என்றபடி காணொளியை நிறைவு செய்கிறார் சுனிதா.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube Video Sunitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment