scorecardresearch

அட நம்ம கட்டத்துறை என்னவா வீட்டு வேலை செய்யுறாரு! – உமா ரியாஸ் யூடியூப் சேனல் ஸ்பெஷல்ஸ்

Cook with Comali Uma Riyaz Khan Youtube ‘நம்ம படத்துல பார்த்த வில்லன் கட்டத்துறையா இது’ என மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அட நம்ம கட்டத்துறை என்னவா வீட்டு வேலை செய்யுறாரு! – உமா ரியாஸ் யூடியூப் சேனல் ஸ்பெஷல்ஸ்
Cook with Comali Uma Riyaz Khan Sharik Youtube Channel Tamil News

Cook with Comali Uma Riyaz Khan Sharik Youtube Channel Tamil News : குக் வித் கோமாளி சீசன் 1-ல், ஜஸ்ட் மிஸ்ஸில் டைட்டிலை விட்டவர் உமா ரியாஸ். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே விதவிதமான உணவு வகைகளை சமைத்து நடுவர்களின் பாராட்டுகளைப் பெற்றார். சமையலில் மட்டுமல்ல, நடனம், நடிப்பு என அத்தனையிலும் ஆல் ரவுண்டர் உமா. தன்னிடம் இருக்கும் திறமைகளையெல்லாம் வெளிப்படுத்தச் சிறந்த பிளாட்பார்மாக யூடியூபை தேர்வுசெய்து, அதில் ஏராளமான சுவாரசிய வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

மற்ற பிரபலங்களின் சேனலை போலவே, இவருடைய சேனலிலும் Vlogs அதிகம். அதேபோல நகைச்சுவையும் அதிகம். உமா ரியாஸ் எனும் பெயரில் இருக்கும் இந்த சேனலில் தற்போது 1.5 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்ஸ் உள்ளனர். தன் குடும்ப உறுப்பினர்களையும் அவ்வப்போது இணைத்து வீடியோ எடுப்பதுதான், இவருடைய சேனலின் சிறப்பம்சம்.

‘கோதாவரி’ என்று மறைந்த நடிகர் விசு வாய்ஸில் கேட்டாலே உமாவின் தாய் கமலா காமேஷ்தான் நினைவுக்கு வருவார். 80-களில் ‘அம்மா’ கதாபாத்திரம் என்றாலே கமலாதான். உமாவின் கணவர் நம் அனைவர்க்கும் பரீட்சையமான ரியாஸ் கான். அதேபோல விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3-ல் பலருடைய ஃபேவரைட் லிஸ்டில் இணைந்த ஷாரிக், இவர்களின் மகன். சொல்லவே வேண்டாம். நிச்சயம் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது ஒவ்வொரு வீடியோவும்.

தன் தாயோடு இணைந்து சமைக்கும் தருணங்கள் அட்டகாசம். சமையலோடு பல சுவாரசிய நினைவலைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதேபோல, ரொமான்ஸ், ஃபிட்னெஸ், ஃபைட் என தன் கணவரோடு இனைந்து செய்யும் அட்ராசிட்டிகள், ரசிக்க வைக்கும்படியாகவே உள்ளன. வழக்கம்போல, பியூட்டி டிப்ஸ் முதல் தன்னிடம் இருக்கும் ஷூ கலெக்ஷன் வரை அத்தனையையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார் உமா.

அதிலும், வனிதா விஜயகுமாரோடு இணைந்து செய்திருக்கும் லூட்டி, வேற லெவல். 3 பகுதிகளாக வெளிவந்த இவர்களின் காம்பினேஷன் வீடியோக்கள் அனைத்தும் மில்லியன் மற்றும் லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றிருக்கின்றன. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி, பிறகு மீண்டு வந்த உமா, தன் நிலையைப் பதிவு செய்திருந்தார்.

அந்த நேரத்தில் தன் கணவர் வீட்டை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டார் என்பதையும் பதிவு செய்திருந்தார். வீடு கூடுவது, துடைப்பது, துணி மதிப்பது, பாத்திரம் தேய்ப்பது என அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தார். ‘நம்ம படத்துல பார்த்த வில்லன் கட்டத்துறையா இது’ என மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். 4 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கும் இந்த விடியோதான் தற்போதைய வைரல் ஹிட். அதுமட்டுமில்லாமல், அன்னையர் தினத்தன்று தன் மகன் ஷாரிக் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ 1 மில்லியன் விட்டிஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. ஸ்டார் குடும்பம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Cook with comali uma riyaz khan sharik youtube channel tamil news