Cook with Comali Uma Riyaz Mini Fridge Tour Tamil News
Cook with Comali Uma Riyaz Mini Fridge Tour Tamil News : 2000-களில் தமிழ்த் திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றால் நிச்சயம் சரண்யா பொன்வண்ணன்தான். அதேபோல 80-களில் கமலா காமேஷ் மட்டும்தான். அப்பாவியான அம்மா வேடம்தான் இவருக்கு எப்போதும். அப்படி ஏராளமான நடிகர், நடிகைக்குத் தாயாக நடித்தவரின் சொந்த மகள், உமா ரியாஸ். ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த உமா, சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்றுள்ளார்.
Advertisment
அந்த வரிசையில் குக் வித் கோமாளி சீசன் 1 இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. மேலும், தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் கலகலப்பான காணொளிகள் பலவற்றை அப்லோட் செய்து வருகிறார். அதில் சமீபத்தில் அவர் அப்லோட் செய்திருந்த தன்னுடைய குட்டி ஃப்ரிட்ஜ் டூர் வீடியோ, பல லைக்ஸ்களை பெற்றுள்ளது. அப்படி என்ன இருந்தது அந்த குட்டி ஃப்ரிட்ஜில்?
Advertisment
Advertisements
"வாங்க வாங்க! இதுதான் என்னுடைய ஹயர் குட்டி பேபி ஃப்ரிட்ஜ்" என்றபடி அந்த மினி ஃப்ரிட்ஜை திறந்து காட்டினார் உமா. "உங்கள் வீடுகளில் இருப்பதைப் போன்றுதான், எல்லோர் வீட்டிலும் எப்படி வைப்பார்களா அப்படிதான் நானும் இதில் பொருள்களை வைத்திருக்கிறேன்" என்றுகூறிக்கொண்டே, கீழ் இருக்கும் காய்கறி பாஸ்கெட்டை திறந்து காட்டினார். அதில், உடல் எடை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் என்றபடி பாதி அவகாடோவை காண்பித்தார். பிறகு, சக்கரவல்லி கிழங்கு உள்ளிட்ட ஆரோக்கியமான காய்கறி வகைகளைக் காண்பித்தார்.
அதன்கூடவே, ஓர் அழுகிய நிலையில் மாம்பழம் ஒன்றை வைத்திருந்தார். அதற்கான காரணம், மாம்பழ சீசன் நிறைவடைந்துவிட்டதால், அவரிடம் இருக்கும் அந்த ஒற்றை பழத்தை சாப்பிடலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் அப்படியே வைத்திருக்கிறாராம். மேலும், தன்னுடைய தாய் நன்கு செய்யும் இரண்டு விஷயங்கள் இதுதான் என்றபடி தயிர் டப்பாவை திறந்து காட்டினார். அந்த இன்னொரு ரெசிபி, நெய்.
&list=LL&index=2
பிறகு, செர்ரி, ப்ளூபெரி ஆகியவற்றைக் காட்டிவிட்டு, தன்னுடைய எல்லா விதமான உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும், வெங்காயம், காய்ந்த மிளகாய் பவுடர் மிக்ஸை எடுத்துக் காட்டினார். பிறகு, சாஸ், டிப்ஸ், டேங், குங்குமப்பூ, சாக்லேட்ஸ், ஐஸ் க்ரீம் ஆகியவற்றைக் காட்டினார். ஐஸ் க்ரீமை எதற்காக சைடு ரேக்கில் வைத்திருக்கிறார் என்பதற்கான விளக்கத்தை, அந்த ஃப்ரீஸரை திறந்து காட்டியபோதுதான் புரிந்தது. முழுவதும், ஐஸ் கட்டிகள். உள்ளே 4 ,5 க்ரீம் மாட்டிக்கொண்டும் இருக்கிறதாம். அதிலிருந்த ஐஸ் கட்டிகளை வாயில் போட்டபடி காணொளியை நிறைவு செய்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil