Advertisment

சமைத்த உணவை ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக எப்படி சேமிப்பது?

பல சுகாதார நிபுணர்கள் சமைத்த உணவை அதிக காலம் ஃபிரிட்ஜில் சேமித்து வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அப்படியானால் எவ்வளவு காலம் சேமிப்பது நல்லது?

author-image
WebDesk
New Update
fridge

How to store food in refrigerator

நம் பிஸியான வாழ்க்கையின் காரணமாக, தினசரி கிச்சனுக்கு சென்று சமைப்பதற்கு பலருக்கு நேரமில்லை. இதனால் பல நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஆப்ஸ், ஹோட்டல், இன்ஸ்டெண்ட் உணவுகளை நம்பி இருக்கிறோம். மணிக்கணக்கில் வேலை பார்த்து சம்பாதித்து, இறுதியில் நம் உடலை கவனிக்க மறந்து விடுகிறோம். அதனால் பல சிக்கல்களுக்கும் ஆளோகிறோம்.

Advertisment

இன்னும் சிலர் உணவை மொத்தமாகத் தயாரித்து, பின்னர் பயன்படுத்துவதற்காக ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கின்றனர். ஆனால் பல சுகாதார நிபுணர்கள் சமைத்த உணவை அதிக காலம் ஃபிரிட்ஜில் சேமித்து வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அப்படியானால் எவ்வளவு காலம் சேமிப்பது நல்லது?

ஊட்டச்சத்து நிபுணர் ரோகினி பாட்டீலின் கூற்றுப்படி, கெட்டு போகக்கூடிய உணவுகளான இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் சேமித்த சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ரொட்டி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அழுகாத பொருட்களை நீண்ட காலத்திற்கு சேமிக்கலாம்.

ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளில், 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு பாக்டீரியா வளர ஆரம்பிக்கலாம். இது உணவு நச்சுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது உணவு மூலம் பரவும் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. பாக்டீரியா பொதுவாக உணவின் சுவை, வாசனை அல்லது தோற்றத்தை மாற்றாது. இதன் விளைவாக, ஒரு உணவு உண்பதற்கு பாதுகாப்பானதா என்பதை உங்களால் சொல்ல முடியாது என்று நிபுணர் கூறினார்.

 பாக்டீரியா வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

cooking

சமைத்தவுடன் நாம் யாரும் உணவை உடனடியாக ஃபிரிட்ஜில் வைப்பதில்லை. உணவு உண்ணும் வரை முதலில் வெளியே தான் இருக்கிறது. அதன் பிறகு குளிர்ந்த உணவைத் தான் ஃபிரிட்ஜில் வைக்கிறோம். இது நுண்ணுயிரிகளை விரைவாகப் பெருக்கி, உணவை மாசுபடுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது. சில எஞ்சிய உணவுகள் ஏன் போதுமான சுவை இல்லை என்பதை இது விளக்குகிறது. சமைத்த அரிசி இதற்கு ஒரு சிறந்த உதாரணம், என்று டாக்டர் பாட்டீல் கூறினார்.

பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்?

* மீதமுள்ள உணவை காற்று புகாத பாத்திரத்தில் சேமிக்கவும் அல்லது மூடி வைக்கவும்.

* எஞ்சிய உணவை ஃபிரிட்ஜில் மேல் அலமாரிகளில் சேமிக்கவும், இது அதிகபட்ச காற்று மற்றும் குளிர்ச்சியைப் பெறுகிறது.

* முதலில் உள்ளே வைக்கும் உணவுகளை உட்கொள்வதை உறுதிபடுத்தவும். எனவே பழைய எஞ்சியவற்றை முன்பக்கமாகவும், புதியவற்றை பின்புறமாகவும் வைக்கவும்.

இவை பொதுவான வழிகாட்டுதல்களாக இருந்தாலும், உணவு உண்பதற்கு இன்னும் பாதுகாப்பானதா என்பதைத் தீர்மானிக்க உங்கள் புலன்களை (பார்வை, வாசனை மற்றும் தொடுதல்) பயன்படுத்துவது எப்போதும் நல்லது. உணவின் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை நிராகரிப்பது நல்லது, என்று டாக்டர் பாட்டீல் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment