குக்கரில் விசில் வரலையா? இதை எல்லாம் செக் பண்ணுங்க; ஈசியா சரி பண்ணலாம்!
சமையல் அறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், குக்கரின் விசில் சத்தம் கேட்கவில்லை என்றால், சமையல் முழுவதையுமே பாதிக்கக்கூடும். இந்த விசில் வராத பிரச்னைக்கு மிக எளிய தீர்வுகளே உள்ளன.
சமையல் அறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், குக்கரின் விசில் சத்தம் கேட்கவில்லை என்றால், சமையல் முழுவதையுமே பாதிக்கக்கூடும். இந்த விசில் வராத பிரச்னைக்கு மிக எளிய தீர்வுகளே உள்ளன.
குக்கரில் விசில் வரலையா? இதை எல்லாம் செக் பண்ணுங்க; ஈசியா சரி பண்ணலாம்!
சமையல் அறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் வேளையில், குக்கரின் விசில் சத்தம் கேட்கவில்லை என்றால், சமையல் முழுவதையுமே பாதிக்கக்கூடும். அரிசி வேகவில்லை, பருப்பு குழையவில்லை, கறி வேகவில்லை எனப் பல பிரச்னைகளை இது கொண்டு வரும். ஆனால், இந்த விசில் வராத பிரச்னைக்கு மிக எளிய தீர்வுகளே உள்ளன.
Advertisment
குக்கர் ஏன் விசில் அடிக்கவில்லை? என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், அது எப்படி வேலை செய்கிறது? என்று பார்ப்போம். குக்கர் மூடி இறுக்கமாக மூடப்பட்டதும், உள்ளே உள்ள நீர் சூடாகி நீராவியாக மாறும். இந்த நீராவி உள்ளே அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த அழுத்தம் குறிப்பிட்ட நிலையை அடைந்ததும், மூடியின் மேல் உள்ள விசில் தூக்கப்பட்டு, நீராவி வெளியேறி, சத்தம் எழுப்பும். இந்தச் செயல்பாட்டில் எங்காவது தடை ஏற்பட்டால், விசில் வராது.
விசில் வராததற்கான முக்கிய காரணங்களும், அவற்றின் தீர்வுகளும்:
1.பெரும்பாலான சமயங்களில் குக்கர் விசில் வராததற்குக் காரணம் அதன் கேஸ்கட்தான். குக்கர் மூடிக்கும், பாடிக்கும் இடையில் காற்று கசியாமல் தடுக்கவே கேஸ்கட் பயன்படுகிறது. இது ரப்பரால் ஆனது என்பதால், காலப்போக்கில் தேய்மானம் அடையும், கடினமாகும், அல்லது தளர்ந்துவிடும். உங்கள் கேஸ்கட்டை கையால் அசைத்துப் பாருங்கள். அது குக்கர் மூடியில் சரியாகப் பொருந்தாமல், எளிதாகச் சுழன்றால், அது தளர்வாகிவிட்டது என்று அர்த்தம். பழைய கேஸ்கட்டை அகற்றி, உங்கள் குக்கர் மாடலுக்குப் பொருத்தமான புதிய கேஸ்கட்டை வாங்கவும். புதிய கேஸ்கட் இறுக்கமாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
2.வெயிட் என்பது குக்கரின் மூடியில் உள்ள சிறிய குழாய். இதன் வழியாகத்தான் நீராவி குறிப்பிட்ட அழுத்தத்தில் வெளியேறுகிறது. இது அடைபட்டிருந்தால் விசில் வராது. வெயிட்டை அகற்றிப் பாருங்கள். அதனுள் உணவுத் துகள்கள், மசாலாப் பொருட்கள் அல்லது சுண்ணாம்பு படிந்திருக்கலாம். குக்கர் மூடியில் வெயிட் பொருந்தும் சிறிய துளை (வென்ட் பைப்) அடைபட்டும் இருக்கலாம். வெயிட்டை நன்கு சுத்தம் செய்யவும். மெல்லிய கம்பி அல்லது ஊக்கு பயன்படுத்தி வெயிட்டில் உள்ள துளையை அடைப்பின்றி சுத்தம் செய்யலாம். வென்ட் பைப்பையும் முழுமையாகச் சுத்தம் செய்யவும்.
3.குக்கரில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டால், ஆபத்தைத் தவிர்க்க சேஃப்டி வால்வு வெடித்து, நீராவியை வெளியேற்றும். இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது. சேஃப்டி வால்வு வெடித்திருந்தால், அதன் சிறிய பித்தளை (அ) மெட்டல் பகுதி வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை காணலாம். சேஃப்டி வால்வு வெடித்திருந்தால், அதை உடனடியாக மாற்ற வேண்டும். இது ஒரு அத்தியாவசிய பாதுகாப்பு அம்சம் என்பதால், இதை அலட்சியப்படுத்தக் கூடாது.
ஒவ்வொரு முறையும் குக்கரைப் பயன்படுத்துவதற்கு முன், கேஸ்கட் மற்றும் வெயிட் இரண்டும் சுத்தமாகவும், சரியாகப் பொருந்தியுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சமையல் முடிந்ததும், குக்கரை சுத்தம் செய்யும் போது, வென்ட் பைப் மற்றும் வெயிட் துளையை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். பழைய, தேய்மானம் அடைந்த அல்லது சேதமடைந்த குக்கரைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது ஆபத்தானதாக முடியலாம்.