சரியான ரவா இட்லி தயாரிக்க உதவும் சில எளிதான சமையல் ஹேக்குகளை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய செஃப் சேகர் சந்திரா (junior sous chef: Hilton Garden Inn New Delhi/Saket), சரியான ரவா இட்லி தயார் செய்ய உள்ள குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.
மைய அரைத்த ரவை (also known as fine rava or sooji) பயன்படுத்தவும், இதனால் மாவு மென்மையான பதத்தில் வரும். கொரகொர ரவை வேண்டாம்.
மாவு தயாரிக்க, புதிய மற்றும் கெட்டியான தயிரை பயன்படுத்தவும். தயிர் மாவுக்கு ஒரு புளிப்பு சுவையை சேர்க்கிறது மற்றும் நொதித்தல் செயல்முறைக்கு உதவுகிறது.
Rava idli cooking hacks
/tamil-ie/media/media_files/uploads/2020/10/021.2-7.jpg)
மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற இட்லிக்கு, மாவை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும். விரைவாக புளிக்க வைக்க நீங்கள் பேக்கிங் சோடாவை மாவில் சேர்க்கலாம். உப்பு மற்றும் சுவையை அதிகரிக்க துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போன்ற மசாலாப் பொருட்களை சேர்க்கவும்.
மாவு கன்சிஸ்டென்சிக்கு வரும்வரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மாவு திக் ஆகவும், அதேநேரம் ஊற்றக்கூடியதாக இருக்க வேண்டும். கூடுதல் சுவைக்காக, வேகவைக்கும் முன் மாவில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். இட்லிகள் ஒட்டாமல் இருக்க மாவை ஊற்றுவதற்கு முன், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“