சிலருக்கு நன்றாக சமைக்க தெரியும், ஆனால் காய்கறிகளை எப்படி சரியாக பார்த்து வாங்குவது என்று தெரியாது. அதேபோல சில காய்கறிகளை சமைக்க சில நுட்பங்கள் தேவை, இது சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் உணவு வீணாகமல் தடுக்க உதவும்.
சமைக்கும் போது வெண்டைக்காய் கொழகொழப்பாக ஆகிறதா?
வெண்டைக்காய் ஒட்டாமல் எப்படி சமைப்பது என்பது இங்கே..
இது மிகவும் பொதுவான பிரச்சனை. நாம் சமைக்கும்போது, வெண்டைக்காய்யில் உள்ள ஒட்டும் தன்மை அதை விரும்பத்தகாததாக ஆக்குகிறது. கூடுதலாக பிசுபிசுவென இருக்கும் வெண்டைக்காய் மற்றும் கிரிஸ்பி வெண்டைக்காய் சுவையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
கிரிஸ்பியான மற்றும் ஒட்டாத வெண்டைக்காய் சமைப்பதற்கான உதவிக்குறிப்பை நீங்கள் தேடுகிறீர்களா?
வெண்டைக்காய் சமைக்கும் போது, சிறிது எலுமிச்சை சாறு அல்லது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
காளான்கள் தண்ணீரை உறிஞ்சிவிடும், எனவே அவற்றைக் கழுவ வேண்டிய அவசியமில்லை. டிஷ் சொதசொதப்பாக மாறாமல் இருக்க, ஈரமான துணியால் சுத்தம் செய்யவும்.
எப்படி சேமிப்பது?
காளான்களில் அதிக ஈரப்பதம் இருப்பது, அவற்றின் ஆயுளைக் குறைக்கிறது. ஆனால், இந்த எளிய ஹேக் மூலம், நீங்கள் இப்போது காளான்களை அதிக நேரம் சேமிக்க முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், காற்று புகாத பாத்திரத்தை எடுத்து காய்ந்த துணி அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து, காளான்களை அதன்மீது வைக்கவும். பின்னர் காளான்களுக்கு மேலே ஒரு நாப்கின் வைத்து பாத்திரத்தை மூடவும். இப்படி செய்வதால், காளான்கள் குறைந்தது ஒரு வாரம் நீடிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“