நம் அனைவருக்கும் கிச்சனில் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நன்றாக சமைப்பவர்கள் கூட, சில சமயங்களில் சமையலறையில் ஒரு மோசமான நாளைக் கொண்டிருக்கலாம். அவர்களின் உணவு திட்டமிட்டபடி இல்லாமல், சில சமயங்களில் பாழாகிவிடும்.
அதேபோல உங்களுக்கும் ஒரு மோசமான சமையலறை நாள் இருந்தால், நீங்கள் இரவு உணவிற்கு சமைத்த உணவு தற்செயலாக பிடித்து விட்டது என்றால், இதோ ஒரு விரைவான உதவிக்குறிப்பு.
உங்களுக்கு தேவையானது ஒரு துண்டு வெங்காயம். உணவுக்கு சுவையூட்டுவது முதல் அந்த எரிந்த வாசனையிலிருந்து விடுபட உதவும் வரை, வெங்காயம் நம் சமையலறையில் இருக்க வேண்டிய முக்கிய உணவு பொருள். வாசனையைக் கட்டுப்படுத்தவும், உங்கள் உணவின் நல்ல பகுதியைச் சேமிக்கவும் வெங்காயத் துண்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது இங்கே.

* குக்கரில் எரியும் வாசனை வந்தவுடன் தீயை அணைக்கவும்.
* ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தோலை அகற்றாமல், நான்கு துண்டுகளாக வெட்டவும்.
* சாதத்தின் உள்ளே நான்கு வெவ்வேறு இடங்களில் துண்டுகளை வைக்கவும்.
* அதை மூடி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
* இப்போது வெங்காய துண்டுகளை வெளியே எடுக்கவும். வெங்காயம் பாதி வெந்ததாக தோன்றலாம்; ஆனால் அது உணவு பிடித்த வாசனையை உறிஞ்சியிருக்கும்.
* சாதம் இப்போது சாப்பிட நன்றாக இருக்கும், எரிந்த சுவையோ, வாசனையோ இருக்காது.
* இருப்பினும், குக்கரின் அடிப்பகுதியில் உள்ள சாதம் வாசனையுடன் இருக்கும், எனவே அதனை கவனமாக நீக்கவும்.
வெங்காயத்தின் இந்த அற்புதமான குணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “