நம்மில் பெரும்பாலோர் பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த பீன்ஸ் சாப்பிட விரும்புகிறோம். ஆனால் அவற்றை உட்கொண்ட பிறகு வயிறு உப்பிசம் மற்றும் வாயு போன்றவற்றை அனுபவிப்பது பொதுவானது. நீங்கள் பீன்ஸைக் குறை கூறினாலும், அவற்றை சரியான முறையில் ஊறவைத்து சமைப்பதன் மூலம் நீங்கள் மேற்கூறிய பிரச்சனைகளை முற்றிலும் தவிர்க்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் ஷோனாலி சபேர்வால் கருத்துப்படி, ராஜ்மா, பாசிப்பயிறு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் மசூர் போன்ற உலர்ந்த பீன்ஸ்களை சமைப்பதற்கு முன், அதன் வெளிப்புற தோலில் இருக்கும் நச்சுகளை அகற்ற சரியான முறையில் ஊறவைக்க வேண்டும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ் ஒருவரின் உடலில் வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

ஊட்டச்சத்து நிபுணர் ஷோனாலி மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பரிந்துரைத்தார்.
முழு பீன்ஸ் நன்றாக ஊற வைக்கப்பட வேண்டும் – கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். ஊறவைத்த தண்ணீரை வடிகட்டவும், இது வாயு காரணியை நீக்குகிறது.
நீங்கள் அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கலாம், அதனால் அவை அவற்றின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அவற்றை உறுதியாக வைத்திருக்கவும், சமைக்கும் போது அவற்றின் வடிவத்தை தக்கவைக்கவும் இது ஒரு வழி.
உங்கள் உடலால் பீன்ஸை ஜீரணிக்க முடியவில்லை என்றால், பிரஷர் குக்கரில் சமைக்கவும். இது அவற்றை மேலும் ஜீரணிக்க உதவும். அவற்றை சமைக்கும் போது வரும் நுரையை எடுத்து விடவும்.
பாசிப்பயிறு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை சமைக்கு போது உப்பு மற்றும் தக்காளி, வினிகர் போன்ற அமிலத்தை உருவாக்கும் மூலப்பொருளை கடைசியில் மட்டும் சேர்க்கவும், ஏனெனில் இது அவற்றை மென்மையாக மாறுவதைத் தடுக்கிறது. அவற்றை மேலும் சுவையாக்க, சமைக்கும் போது சிவப்பு பூசணி, கேரட், வெங்காயம் மற்றும் அதிகளவு காய்கறிகள், (ஒவ்வொன்றும் 1 கப்) மற்றும் குறைந்தளவு தண்ணீர் சேர்க்கவும்.
இனி அடுத்தமுறை சமைக்கும்போது மறக்காமல் இந்த குறிப்புகளை பின்பற்றவும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”