சமையல் எண்ணெய்களை சேமிப்பதற்கான சரியான வழி பற்றி உங்களுக்கு தெரியுமா?
செஃப் திவ்யா பூட்டானியின் கூற்றுப்படி, எளிதில் எடுப்பதற்கு வசதியாக, எண்ணெய்களை அடுப்புக்கு அருகில் வைத்திருப்பது புற்றுநோய் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் நம்மை சிக்கலில் சிக்க வைக்கும்.
எண்ணெய்களை அடுப்புக்கு அருகில் சேமித்து வைப்பதை தவிர்க்கவும். அதிலிருந்து வரும் வெப்பம் ஆக்சிஜனேற்ற செயல்முறையை துரிதப்படுத்துகிறது, எண்ணெயை கெட்டுப் போக வைக்கிறது. ஆக்ஸிஜனேற்றமானது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது, என்று பூட்டானி கூறினார்.
உணவியல் நிபுணர் ராஷி சாஹல் (dietician, La Femme Hospital) கூறுகையில், அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், ஆக்சிஜனேற்றம் காரணமாக பேக்கைத் திறந்தவுடன் சமையல் எண்ணெய்கள் மோசமடையத் தொடங்குகின்றன.
இது ஒரு ரசாயன எதிர்வினை, இதில் வளிமண்டல ஆக்ஸிஜன், ட்ரைகிளிசரைடு மாலிகியூள்ஸின் ஃபேட்டி ஆசிட் செயினை தாக்குகிறது, ஒருவர் எண்ணெயைச் சேமிக்க சரியான கன்டெய்னரை பயன்படுத்த வேண்டும் மற்றும் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க மூடியை இறுக்கமாக மூட வேண்டும்.
இந்த எண்ணெய்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் தொடர்பான நோய்களுடன் தொடர்புடையவை. இந்த நச்சு கலவைகள் நமது வைட்டமின்கள் B மற்றும் E ஐ எதிர்மறையாக குறைக்கலாம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம், என்று சாஹல் கூறினார்.
சமையல் எண்ணெய்களை வாங்கும் போது மற்றும் சேமிக்கும் போது நம்மில் பெரும்பாலோர் செய்யும் சில பொதுவான தவறுகளையும் பூட்டானி பகிர்ந்துள்ளார்:
சமையல் எண்ணெய்யை ஸ்பெஷல் கன்டெய்னர் அல்லது pourers மாற்றக்கூடாது, ஏனெனில் இது ஆக்ஸிஜன், எண்ணெயை சிதைக்க அனுமதிக்கிறது. ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் எண்ணெயின் தரத்தை குறைக்கிறது, இதனால் அது மாசடைகிறது.
சமையல் எண்ணெய்களை அது வரும் கன்டெய்னரில் வைத்திருப்பது சிறந்தது, மேலும் 1-2 மாதங்களுக்குள் நீங்கள் பயன்படுத்துவதை மட்டும் வாங்கவும்.
மொத்தமாக வாங்குவது சிறந்தது என்று நான் நினைத்தேன், ஆனால் எனது 5L பாட்டில் எண்ணெயை 2 மாதங்களுக்குள் நான் முடிக்கவில்லை, அதனால் வெப்பம், ஒளி, ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் எண்ணெயை மாசடைய வைத்தது. இந்த நான்கும் எண்ணெயின் கலவையை பாதிக்கின்றன, இது நமது ஆரோக்கியத்தில் நீண்டகால எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மற்ற எல்லா தயாரிப்புகளையும் போலவே, எண்ணெய்களின் காலாவதி தேதியை எப்போதும் சரிபார்ப்பது சிறந்தது.
பொதுவாக, எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெயை 6 மாதங்கள் வரை வைத்திருக்கலாம். இது பொதுவாக மிக நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது, ஆனால் சேமிப்பு நிலைமைகள் எண்ணெயின் ஆயுளை கணிசமாக மாற்றும், என்று பூட்டானி கூறினார்.
எண்ணெயின் யுவி லைட் வெளிப்பாட்டைக் குறைக்கவும், ஆக்சிஜனேற்றத்தின் விளைவுகளைக் குறைக்கவும் டார்க் கிரீன் பாட்டில்களில் எண்ணெய்களை வாங்க வேண்டும். கப்போர்டு போன்ற குளிர் இருண்ட இடத்தில் எண்ணெய்களை சேமிப்பது நல்லது. நீங்கள் ஏற்கனவே எண்ணெய்களை கன்டெய்னரில் மாற்றியிருந்தால் பரவாயில்லை. காலாவதி தேதிக்குள் அதைப் பயன்படுத்தவும், பயன்படுத்தப்படாத எண்ணெயை குப்பைத் தொட்டியில் எறியுங்கள்.
இதை ஒப்புக்கொண்ட சாஹல், ஒளி, கொழுப்பு அமில ஆக்சிஜனேற்றத்தை துரிதப்படுத்துகிறது.
இது பாலிஅன்சாச்சுரேட்டட் எண்ணெய்களில் ஆக்ஸிஜனேற்றத்தின் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தும். பாட்டிலுக்குள் ஒளி நுழைவதைத் தடுக்க இருண்ட நிற பாட்டில்களில் அவற்றைச் சேமித்து வைக்க முயற்சிக்கவும், என்று சாஹல் கூறினார்.
நீண்ட நேரம் சேமிக்கும் போது கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்த முயற்சிக்கவும், ஏனெனில் பிளாஸ்டிக் காலப்போக்கில் ரசாயனங்களை வெளியேற்றும். இது ஒட்டுமொத்த சுவையை பாதிக்கலாம்.
இரும்பு மற்றும் செம்பு பாட்டில்களில் சேமித்து வைக்க வேண்டாம், ஏனெனில் அவை எண்ணெய்களுடன் தொடர்பு கொள்கின்றன மற்றும் அவற்றை நுகர்வுக்கு பாதுகாப்பற்றதாக ஆக்குகின்றன.
சில சமையல் எண்ணெய்கள் அறை வெப்பநிலையில் சிறப்பாக இருக்கும். ஆனால் ட்ரஃபிள் ஆயில், அவகேடோ, கார்ன், சஃப்லார் மற்றும் சில்லி போன்ற சில எண்ணெய்களை ஃபிரிட்ஜில் சேமிப்பதன் மூலம் அதன் ஆயுள் இன்னும் அதிகமாக இருக்கும்.
அதிக வெப்பநிலை தேவைப்படும் சமையலுக்கு வெப்பத்தை எதிர்க்கும் ஹீட் ரெசிஸ்டென்ட் எண்ணெய் பயன்படுத்தவும்.
Read in English: Storing cooking oil near the stove and other common mistakes you may be unknowingly making
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.