இன்றைய வேகமாக நகரும் வாழ்க்கையில், சமையல் என்பது கடினமான வேலையாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவது உங்கள் சமையல் நேரத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சுவையில் எந்த சமரசமும் இல்லாமல் உங்கள் சமையல் திறன்களை மேம்படுத்தவும் உதவும்!
Advertisment
தினசரி உங்கள் வேலையை எளிதாக்கும், மிகவும் பயனுள்ள சில சமையல் ஹேக்ஸ் இதோ!
உருளைக்கிழங்கை மசித்துச் செய்யும் உணவுகளில் சிறிதளவு ஓமம் கலந்து செய்ய எளிதில் செரிமானமாவதுடன் நல்ல மணத்துடன் இருக்கும். வாய்வுத் தொல்லை நீங்கும்.
உருளைக்கிழங்கை ஐஸ் வாட்டரில் கொஞ்ச நேரம் போட்டு வைத்து பிறகு வறுத்தால் மொறு மொறுப்பாக இருக்கும். அதுபோல், உருளைக் கிழங்கை வேக வைக்கும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் கிழங்கு வெடிக்காமல் இருக்கும்.
காய்ந்த கறிவேப்பிலையை தூக்கி யெறியாமல், இட்லி வேக வைக்கும் முன்பு, இட்லிச் சட்டியில் உள்ள தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டால் இட்லி மணமாக இருக்கும்.
முட்டைக்கோசை சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
சாம்பாருக்குப் பருப்பு வேகவைக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேகவைத்து சாம்பார் வைக்க, உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும்.
வெண்டைக்காய் சமைக்கும்போது, சிறிது தயிர் சேர்த்து வதக்கினால் சுவையாகவும், வழவழப்பு இல்லாமலும் இருக்கும்.
கோதுமையில் பரோட்டா செய்யும்போது ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம் கலந்து செய்யலாம். சுவையாகவும் எளிதில் ஜீரணமும் ஆகும்.
பால் குக்கரின் அடியில் ஒட்டிக் கொண்டு என்னதான் தேய்த்தாலும் போகாமல் அடம் பிடிக்கும். இதற்கு பாலை காய்ச்சுவதற்கு முன்பாக பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டால் இந்த பிரச்னையே வராது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“