கிச்சனில் நாம் எவ்வளவு தான் கவனமாக வேலை செய்தாலும், பால் காய்ச்சும் போது, அது பொங்கி கீழே விழுவது மட்டும் நம்மால் தடுக்கவே முடியாது. ஒவ்வொரு முறையும் பால் பொங்கும் வரை பக்கத்தில் நின்றாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அது கொதித்து கீழே சிந்தி அடுப்பு முழுவதும் நாசமாகிவிடும். இன்னும் சிலர் அடுப்பில் சிம்மில் பால் வைத்துவிட்டு அது கொதிப்பதற்காக, அதிக நேரம் காத்திருப்பார்கள். அப்படியே சில நேரங்களில் அடுப்பில் பால் இருப்பதையும் மறந்து விடுவார்கள்.
ஆனால் இனி நீங்கள் பயப்படாமல் பால் காய்ச்சலாம். நீங்கள் கிச்சனில் ஒவ்வொரு முறை பால் காய்ச்சும் போது, இந்த சின்ன ஹேக், அது பொங்கி கீழே விழாமல் தடுக்கும்.
கீழே உள்ள வீடியோவை பாருங்கள்
இனி வீட்டில் பால் காய்ச்சும்போது, பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைக்கவும். இப்படி செய்வதால் பால் கொதித்தாலும், கீழே சிந்தாமல் இருக்கும்.
மரக்கரண்டி வெப்பத்தைத் தடுக்க உதவுகிறது. இது பால் பொங்கும்போது அதை தடுத்து கீழே உள்ள அழுத்தத்தைக் குறைத்து பால் பொங்கி வழிவதைத் தடுக்கிறது.
இந்த குறிப்புளையும் பாருங்க
பால் பொங்கும்போது அதை அடக்குவதற்கு சில துளிகள் குளிர்ந்த நீரை தெளிக்கலாம்.
பால் புளிக்காமல் இருப்பதற்கு, ஏலக்காயைப் பால் காய்ச்சும் போதே அதனுடன் சேர்க்கவும். அவ்வாறு செய்தால் நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும்.
பால் பாத்திரம் தீய்ந்து விட்டதா? சிறிதளவு வெங்காயத்தை அந்தப் பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டால் தீய்ந்த கறை போய்விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“