/indian-express-tamil/media/media_files/2025/08/08/chef-damu-2025-08-08-13-42-54.jpg)
Chef Damu Cooking Tips
சமையல் என்பது வெறுமனே பசியைப் போக்கும் செயல் மட்டுமல்ல; அது ஒரு கலை. எல்லோராலும் சமைக்க முடியும், ஆனால் ஒரு சிலரால் மட்டுமே சிறந்த சமையல் கலைஞராக (Chef) ஆக முடியும். சமையல் கலையில் சிறந்து விளங்குவதற்கு நிறைய உழைப்பு தேவை. நீங்களும் ஒரு சிறந்த சமையல் கலைஞர் ஆகத் தயாரா? அப்படியானால், இந்த அற்புதமான சமையல் குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும். நீங்கள் சமையலில் புதியவர் ஆனாலும் சரி, அல்லது ஏற்கனவே சிறந்தவர் ஆனாலும் சரி, செஃப் தாமு சொல்லும் இந்த எளிய தந்திரங்கள் உங்கள் உணவை இன்னும் அட்டகாசமானதாக மாற்றும்.
குழம்பில் புளிப்பு அதிகமானால் என்ன செய்வது?
சாம்பார், காரக்குழம்பு, மீன்குழம்பு என எந்த குழம்பாக இருந்தாலும் சில நேரங்களில் புளிப்பு அதிகமாகிவிடும். என்ன செய்வது? கவலை வேண்டாம்! ஒரு சிறு துண்டு வெல்லத்துடன் சிறிது மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து புளிப்பு அதிகமான குழம்பில் ஊற்றிவிடுங்கள். இந்த கலவை புளிப்புத்தன்மையை குறைத்து சரியான சுவையை கொடுக்கும்.
காரத்தை குறைப்பது எப்படி?
குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால், இரண்டு தக்காளிகளைப் பிழிந்து, கோலிகுண்டு அளவு புளியுடன் சேர்த்து குழம்பில் போட்டால் காரம் குறைந்துவிடும்.
உப்பை சரி செய்வது எப்படி?
உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு எலுமிச்சை பழம் சாறுடன், அரை டீஸ்பூன் தனியாதூள் மற்றும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த கலவையை உப்பு அதிகமான குழம்பில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட்டால், உப்பு சரியாக இருக்கும். எப்பொழுதும் குழம்பில் உப்பு போடும்போது அரை உப்பு மட்டும் போடுங்கள். வாயில் போட்டுப் பார்த்து உப்பை சரி செய்துகொள்வது நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.