ஹோட்டல் ஸ்டைலில் நூடுல்ஸ் வீட்டிலியே!

ஒருமுறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் தானாகவே மறுமுறை செய்து தரும்படி கேட்பார்கள்

குழந்தைகளுக்கு மட்டுமில்லை  பெரியவர்களுக்கு நூடுல்ஸ் என்றால் கொள்ளை பிரியம்.  காரணம் நூல்ஸ் பார்ப்பதற்கே அவ்வளவு கலர்ஃபுல்லா இருக்கும். கூடவே அதிலும் வரும் வாசனை   சாப்பிடாதவர்களை கூட சாப்பிட வைக்கும்.

நூடுல்ஸ்:

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நமது சமையல் அறையில் நுழைந்த  நூடுலிஸில் ஆயிரம் வெரைட்டிகள் உள்ளது. சிக்கன், எக், பீப், வெஜ், சூப் என்று  விதவிதமான டேஸ்டிலும்,  சைனீஸ், இந்தியன், மலேசியன் என்று ஊருக்கு ஒரு பெயர் என்று பலவகைகள் உள்ளன. இப்படி அதிகமாக விரும்படும் நூடுல்ஸில் தான்  அதிகளவு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நூடுல்ஸ்

ஆனால் நம் வீட்டில் உள்ள பிள்ளைகள் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு தேவை நாவிற்கு ருசியான டேஸ்டியான நூடுல்ஸ். சரி டேஸ்டியாக தானே வீட்டிலியே எள்தியாக செய்துக்  கொடுத்து விடலாம் என்று பகல் கனவு காணும் தாய்மார்களுக்கு இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமே.

”போங்க அம்மா நீங்க செஞ்ச நூடுல்ஸ் கடையில செய்யுற மாதிரி இல்லை” என்று   அம்மாவை கோவித்துக் கொள்ளும் பல பிள்ளைகள் நம் இல்லத்தில் இருக்கின்றன.   என்னத்தான் கஷ்டப்பட்டு  வேலை மனக்கெடுத்து செஞ்சாலும் ஹோட்டலில் வருவது போல்  வரவில்லையே என்று கவலைபடும் தாய் மார்களுக்கு இதோ முக்கியமான குறிப்பு.

வாணலியில்  மசாலாவை தயார் செய்யும் போது குறிப்பாக சோயா சாஸ் ஊற்றிய பிறகு அதில் சிறிதளவு சர்க்கரை சேருங்கள். காரத்துடன் சர்க்கரை சேர்க்கப்படும் போது அது ருசியை கூட்டும். இறுதியாக  வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து வதக்கி எடுக்கும் போது அதன் மேல் சிறிதளவு சால்ட் மற்றும் பெப்பர் தூளை சேருங்கள்.

ஒருமுறை இப்படி செய்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் தானாகவே மறுமுறை செய்து தரும்படி கேட்பார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close