நம்மில் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் காலை உணவு தோசை தான். இரவிலும் கூட…
ஆனால் சிலருக்கு தோசை சூடுவது என்பது தோசைக் கல்லுடன் பெரிய போர் புரிவதை போல, அவ்வளவு கடினமாக இருக்கும். சில நேரங்களில் தோசை கல்லுடன் ஒட்டிக் கொண்டு வராமல் தொல்லை செய்யும்.
தோசை சூடும் போது நாம் செய்யும் பொதுவான 6 தவறுகளை செஃப் சஞ்சீவ் கபூர் இங்கு தெளிவுபடுத்தியுள்ளார், மேலும் அதற்கான தீர்வுகளையும் பகிர்ந்துள்ளார்…
நான்ஸ்டிக் தவாவில் வெங்காயம், எண்ணெயுடன் தடவுவது
நான்ஸ்டிக் தவாவில் வெங்காயம் அல்லது எண்ணெய் தடவ வேண்டாம் என்று செஃப் சஞ்சீவ் அறிவுறுத்துகிறார்.
தோசைக் கல் ஏற்கனவே நான்ஸ்டிக், எனவே அவற்றில் செய்யப்படும் தோசை கூடுதல் எண்ணெய் தேவையில்லை, மேலும் அவை எடுக்கும் போதும் எளிதாக வரும்.
தோசைக் கல் வெப்பநிலை
தோசை சுடுவதில், தவாவின் சரியான வெப்பநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, தவா மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இல்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
செஃப் சஞ்சீவ், தீயை எப்பொழுதும் மிதமாக வைத்து, அதன் மேல் தோசை மாவை ஊற்ற அறிவுறுத்துகிறார்.
சீசனிங் செய்யாத இரும்பு தவா
சீசனிங் செய்யாத இரும்பு தவாவில் தோசை சுடுவது தவறு, இரும்பு தவாவை சீசனிங் செய்வது மிகவும் முக்கியம், மேலும் வெங்காயம் மற்றும் சிறிது எண்ணெய் பயன்படுத்தி நன்கு சீசனிங் செய்யலாம்.
தோசை மாவு கன்சிஸ்டன்சி
செஃப் சஞ்சீவ் மிகவும் திக்கான அல்லது தண்ணீர் போல இருக்கும் மாவை தவிர்க்க பரிந்துரைக்கிறார்.
தோசை மாவு மீடியம் திக்னெஸ் ஆக இருக்க வேண்டும், மேலும் தோசை சுடுவதற்கு முன்பு அதை ஃபிரிட்ஜில் இருந்து சிறிது நேரம் அறைவெப்ப நிலையில் வைப்பது மிகவும் முக்கியம்.
புளித்த மாவு
தோசை மாவு புளிக்க விடுவது முக்கியம், அப்போதுதான் சரியான சுவை மற்றும் அமைப்பு கிடைக்கும். மாவு அரைத்த உடனேயே பயன்படுத்துவது உங்களுக்கு சரியான தோசையைத் தராது.
மாவை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்
மாவு நொதித்தல் (fermentation) என்பது அறை வெப்பநிலையில் நடைபெற வேண்டும்.
மாவை ஃபிரிட்ஜில் வைப்பது இந்த செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும், மேலும் குளிர்ந்த மாவைக் கொண்டு செய்யப்படும் தோசை பேரழிவாக மாறும் என்று செஃப் சஞ்சீவ் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“