scorecardresearch

பாஸ்தா சமைக்க, இறைச்சி மரைனேட் செய்ய; செஃப் சஞ்சீவ் கபூர் சூப்பர் ஹேக்ஸ்

ஒரு ஜிப்லாக் பையில், இறைச்சி மற்றும் மரைனேட்டிங் பொருட்களை சேர்க்கவும். பின்னர் அனைத்தையும் ஒன்றாக அழுத்தி ஊற வைக்கவும்.

lifestyle
Cooking tips

பிரபல செஃப் சஞ்சீவ் கபூரின் இன்ஸ்டாகிராம் பக்கம் உணவு பிரியர்களுக்கும், தங்கள் சமையலறைகளில் பரிசோதனை செய்ய விரும்புபவர்களுக்கும் ஒரு புதையல் பெட்டியாகும். ஹேக்ஸ் முதல் சமையல் குறிப்புகள் வரை, அவருடைய இன்ஸ்டாவில் நீங்கள் அனைத்தையும் காணலாம்.

அந்தவகையில், சமையல் வழிகாட்டி சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார், இது வழக்கமாக சமைப்பவர்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த ஹேக்குகளைக் கற்றுக்கொள்வது உங்களுக்கு பெரிதும் உதவும்.

அடுத்த முறை இறைச்சியை மரைனேட் செய்யும்போது, ​​இதைப் பின்பற்றவும்.

வீடியோவில் உள்ளபடி, ஒரு ஜிப்லாக் பையில், இறைச்சி மற்றும் மரைனேட்டிங் பொருட்களை சேர்க்கவும். பின்னர் அனைத்தையும் ஒன்றாக அழுத்தி ஊற வைக்கவும்.

பாஸ்தா சமைக்க

பாஸ்தா சமைக்கும் போது அது வெந்து விட்டதா என்பதை அறிய சமைக்கும் போது ஒரு துண்டு பாஸ்தாவை வெளியே எடுக்கவும், அதை பாதியாக வெட்டுங்கள், விளிம்புகளைப் பாருங்கள்.

அது வெண்மையாக இருந்தால், பாஸ்தா இன்னும் பச்சையாக உள்ளது, மேலும் சமைக்க அதிக நேரம் தேவைப்படும்.

பாஸ்தா ஒட்டாமல் இருக்க

முதலில் கொதிக்கும் நீரில் உப்பு சேர்க்கவும், பிறகு எண்ணெய் சேர்க்கவும்

எண்ணெய் பாஸ்தாவை ஒட்டவிடாமல் தடுக்கும்

இறைச்சி சமைக்க

இறைச்சி சமமாக சமைக்கப்படுவதை உறுதி செய்ய, முழுவதும் கீறி விடுங்கள். இது மசாலா, இறைச்சியில் விரைவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது, அது சமமாக சமைக்கப்படும்.

அடுத்தமுறை சமைக்கும் போது இந்த பயனுள்ள சமையலறை ஹேக்குகளை மறக்காமல் முயற்சிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Cooking tips how to marinate meat how to cook pasta