கறை படிந்த பாத்திரம் மற்றும் கருகிய ரொட்டி போன்ற சில விஷயங்கள் சமையலறையில் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுக்கலாம். இதுபோன்ற சமயங்களில், சமைப்பதைத் தொந்தரவில்லாத அனுபவமாக்கும் குறிப்புகள் இங்குள்ளன.
மாஸ்டர்செஃப் பங்கஜ் பதூரியா சமையலறையில் நேரத்தைச் சேமிக்க உதவும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
மசாலா கன்டெய்னரில் இருந்து கறை எப்படி அகற்றுவது?
மசாலாக் கறை படிந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு அதிக ஆற்றலும் நேரமும் தேவைப்படுகின்றன, குறிப்பாக மஞ்சள் கறை படிந்து இருக்கும் போது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மசாலா இருந்த பாத்திரத்தில் பேக்கிங் சோடா, வினிகர் மற்றும் டிஷ் வாஷர் ஊற்றி நன்கு குலுக்கவும்.
இப்போது 10 நிமிடங்கள் விட்டு, தண்ணீரில் கழுவினால், கறை நீங்கி பாத்திரம் சுத்தம் ஆகும்.
மீதமுள்ள சாதத்தை மீண்டும் புதிது போல சூடுபடுத்துவது எப்படி?

பல சமயங்களில், ருசியாக இல்லை என்பதால், மீதியுள்ள சாதத்தை எடுப்பவர்கள் இல்லை. ஆனால் இந்த ஹேக் அவற்றை புதிதாக சமைத்த அரிசியைப் போல சுவைக்க வைக்கும். மீதமுள்ள சாதத்தை மீண்டும் பயன்படுத்த, சில துளிகள் தண்ணீரை தெளித்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும்.
பச்சை காய்கறிகளை எப்படி கழுவ வேண்டும்?

கீரையை நறுக்கிய பின் கழுவுகிறீர்களா? ஆம் எனில், நீங்கள் உடனடியாக அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும். பச்சைக் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்த பின்னரே வெட்ட வேண்டும் என்று செஃப் பரிந்துரைத்தார். நீங்கள் காய்கறிகளை நறுக்கிய பிறகு கழுவினால், அதில் இருந்து ஊட்டச்சத்துக்கள் வெளியேறும், என்று அவர் கூறினார்.
தக்காளியை எப்படி சேமிப்பது

நம்மில் பெரும்பாலோர் தக்காளியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறோம், ஆனால் செஃப் கூற்றுப்படி, அவற்றை சேமிப்பதற்கு இது சரியான வழி அல்ல. அவற்றின் தண்டு கீழே இருக்குமாறு வெளியே சேமித்து வைக்கவும்., அவை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள், என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“