சமையலறை வெறும் உணவு தயாரிப்பதற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு ஆய்வுக்கூடம் போல, இங்கு நீங்கள் பல சோதனைகள் செய்யலாம். அதிலும் சமையலை ரசிக்கும் சிலர், சமையலை தாண்டி பல விஷயங்களை யோசிக்கும் இடமாகவும் சமையலறை உள்ளது. அப்படி செஃப் ஒருவர் பகிர்ந்த ஒரு வீடியோதான் இணையத்தை இப்போது புயலாக தாக்கி வருகிறது.
அது என்ன வீடியோ? அப்படி அந்த செஃப் என்னதான் செய்தார்?
நீங்கள் அடிக்கடி வேகவைத்த முட்டைகளை சாப்பிடுபவரா? அப்படியானால் முட்டையிலிருந்து ஓட்டை பிரிப்பது எவ்வளவு கடினமான வேலை என்று உங்களுக்கு தெரியும்.
முட்டைகளை உரிக்கும்போது கைகள் சூடாமல் இருக்க குளிர்ந்த நீரில் முட்டைகளை வைக்க வேண்டும். சில நேரங்களில் முட்டை சரியாக வேகவில்லை என்றால், ஓட்டுடன் ஓட்டிக் கொண்டு தொல்லை செய்யும்.
உங்களுக்காகவே செஃப் Max Klymenko ஒரு புதுமையான வழியைப் பகிர்ந்து கொண்டார். இது நீங்கள் ஒருபோதும் நினைத்து பார்க்காதது. அவர் முட்டையை உரிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
முட்டை ஓடுகளை உரிக்காமல் முட்டையை வெளியே எடுப்பது எப்படி என்ற மேஜிக் உங்களுக்கு தெரியுமா?
முட்டையின் அடிப்பகுதியில் ஒரு குச்சியை வைத்து தட்டி, பெரிய துளை ஒன்றை போட்டு ஓட்டை பிரிக்கிறார். அதேபோல முட்டையின் மேல்பகுதியில் சிறிய துளை ஒன்றை போடுகிறார். இப்போது அவர் தன் முழு சக்தியையும் பயன்படுத்தி சின்ன துளையில் ஊதுகிறார். என்ன ஒரு அதியம். முட்டை ஓடுகளை பிரிக்காமலே நேரடியாக அவர் கையில் வந்து விழுகிறது.
அந்த வீடியோவை பாருங்கள்
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இனி முட்டை வேகவைக்கும் போது இந்த தந்திரத்தை பயன்படுத்தி, முட்டை ஓடுகளே பிரிக்காமலே முட்டையை வெளியே எடுங்கள். இந்த மேஜிக்கை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் செய்துகாட்டி சூப்பர்மேன் ஆகுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“