சிலருக்கு நன்றாக சமைக்க தெரியும், ஆனால் காய்கறிகளை எப்படி சரியாக பார்த்து வாங்குவது என்று தெரியாது. அதேபோல சில காய்கறிகளை சமைக்க சில நுட்பங்கள் தேவை, இது சமையலறையில் நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் உணவு வீணாகமல் தடுக்க உதவும்.
Advertisment
இங்கு மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா, உங்கள் சமையலறை நேரத்தை ரசிக்க வைக்கும் சில சுவாரஸ்யமான குறிப்புகளை பகிர்ந்து கொண்டார்.
மைக்ரோவேவை சுத்தம் செய்வது முதல் காலிஃபிளவரைத் தேர்ந்தெடுப்பது வரை, செஃப் பின்வரும் குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.
வெண்டைக்காய் ஒட்டுவதை எவ்வாறு தடுப்பது
இது மிகவும் பொதுவான பிரச்சனை. நாம் சமைக்கும்போது, வெண்டைக்காய்யில் உள்ள ஒட்டும் தன்மை அதை விரும்பத்தகாததாகக் காட்டுகிறது. கூடுதலாக பிசுபிசுவென இருக்கும் வெண்டைக்காய் மற்றும் கிரிஸ்பி வெண்டைக்காய் சுவையில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
கிரிஸ்பியான மற்றும் ஒட்டாத வெண்டைக்காய் சமைப்பதற்கான உதவிக்குறிப்பை நீங்கள் தேடுகிறீர்களா? வெண்டைக்காய் சமைக்கும் போது, சிறிது எலுமிச்சை சாறு அல்லது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்கவும் என்று பங்கஜ் பரிந்துரைத்தார்.
பாத்திரங்களில் இருந்து ஸ்டிக்கர் அகற்றுவது எப்படி?
நீங்கள் புதிய பாத்திரங்களை வாங்கி ஸ்டிக்கர்களை அகற்ற விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அடுப்பில் ஸ்டிக்கர் இருக்கும் பக்கத்தை காட்டி சூடாக்கவும். இந்த ஹேக் எந்த தொந்தரவும் கறையும் இல்லாமல் ஸ்டிக்கர்களை அகற்ற உதவும்.
சால்ட் ஷேக்கர்
பல நேரங்களில், சால்ட் ஷேக்கரின் துளைகளில் உப்பு சிக்கிக் கொள்கிறது; குறிப்பாக பருவமழை காலத்தில். பங்கஜ் ஷேக்கரில், ஒரு சில அரிசி தானியங்களை வைக்க பரிந்துரைத்தார். ஷேக்கரில் உப்பு சிக்காமல் இருப்பதை இது உறுதி செய்யும்.
மைக்ரோவேவை எப்படி சுத்தம் செய்வது?
மைக்ரோவேவை வெளியில் இருந்து சுத்தம் செய்வது எளிதானது என்றாலும், உள்ளே இருந்து கறைகளை அகற்றுவது ஒரு பெரிய வேலை, நீங்களும் இந்த சிக்கலை எதிர்கொண்டால், இந்த உதவிக்குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு கிண்ணத்தில் தண்ணீருடன், எலுமிச்சை சாற்றை கலந்து அதை 3-4 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்யவும். பிறகு அதை துடைத்து சுத்தம் செய்யவும்.
காலிஃபிளவர் எப்படி பார்த்து வாங்குவது?
அடுத்த குறிப்பு சிறந்த காலிஃபிளவரை தேர்ந்தெடுப்பது. எல்லோரும் சிறந்த காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் அல்ல. பங்கஜ் கூற்றுப்படி, உறுதியான மற்றும் இறுக்கமாக மூடியிருக்கும் காலிஃபிளவரை தேர்வு செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“