ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பேணுவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இதற்கு நாம் போதுமான முன்னுரிமை கொடுப்பதில்லை.
இருப்பினும், நல்ல செய்தி என்னவென்றால், நல்ல குடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நீங்கள் நிறைய செய்ய வேண்டியதில்லை. நீங்கள் சமைக்கும் முறையில், எளிய மாற்றங்களைச் செய்வது, உங்கள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், என்று மருத்துவர் நிதி பாண்டியா பன்ஷாலி இன்ஸ்டாகிராமில் கூறினார்.
சில அன்றாட உணவுப் பொருட்களை சமைக்கும் போது, அவற்றில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் இன்னும் எளிதாக ஜீரணிக்கும். உதாரணமாக, காலிஃபிளவரின் சிறந்த செரிமானத்திற்கு, அதனுடன் பெருஞ்சீரகம் சேர்க்கலாம்.
இதேபோல், பருப்பில் சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்ப்பது அதை மேலும் செரிமானமாக்குகிறது. பீன்ஸில் எண்ணெய், சீரகம் மற்றும் பிரியாணி இலை மற்றும் சோளத்தில்’ நெய், சீரகம் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்ப்பது அதன் செரிமானத்தை அதிகரிக்கும்.
“உங்கள் உணவுகளில் நல்ல கொழுப்புகளைச் சேர்ப்பதே அவற்றை மேலும் செரிமானமாக்குவதற்கான முதல் வழி” என்று பாண்டியா கூறினார்.
கொழுப்பு வெப்பத்தைத் தக்கவைத்து சிதறடிக்கும், மேலும் குடலில் உள்ள சூடான நொதிகளின் மீது அழுத்தம் கொடுக்கும் உணவுகளை உடைக்கவும் உதவுகிறது. அந்த கொழுப்புகளில் மூலிகைகள் மற்றும் பொருத்தமான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை துரிதப்படுத்துவதற்கும் அனுமதிக்கும்.
இதை ஒப்புக்கொண்ட ஊட்டச்சத்து நிபுணர் ரச்சனா அகர்வால் ஆயுர்வேதத்தின் படி, “பச்சைக் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல, ஏனெனில் அது உடலில் உறிஞ்சப்படுவதில்லை.” என்றார்.
ப்ரோக்கோலியின் சிறந்த செரிமானத்திற்கு, வொயிட் பட்டர் அல்லது கோல்டு பிரஸ்டு எண்ணெயுடன், இரைப்பை சாறுகளைத் தூண்டுவதற்கு மிளகு சேர்க்கலாம். பச்சைக் காய்கறிகள் வைட்டமின் ஏ இன் நல்ல மூலமாகும், இது கொஞ்சம் கொழுப்புடன் சாப்பிடும்போது உடலில் நன்றாக சேருகிறது, என்று அவர் கூறினார்.

சில உணவுகளை நன்றாக ஜீரணிக்க உதவும் இதுபோன்ற பிற சேர்க்கைகளை அவர் பட்டியலிட்டார்.
கொண்டைக்கடலை
நன்றாக ஊற வைக்கவும்; கொதிக்கும் போது இஞ்சி மற்றும் சிறிது நெய் சேர்த்து, பின்னர் கரம் மசாலா சேர்க்கவும்.
பால்
பழங்கள் அல்லது உப்புத் தின்பண்டங்களுடன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். மஞ்சள் சேர்த்து இரவில் குடிப்பது சிறந்தது. சுக்கு மற்றும் கருப்பு மிளகுதூள் சேர்த்தால் எளிதில் ஜீரணமாகும்.
ஹோம்மேட் மசாலா
குறைந்த அளவில் எடுத்துக் கொண்டால், அவை வயிறு மற்றும் கல்லீரலில் செரிமான சாறுகளை சுரக்க உதவும், இதனால் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. ரெடிமேட் மசாலாவில் ரசாயனங்கள் கலந்து அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“