கூல் ரூஃப்: அக்னி வெயிலுக்கு ஒரு வரப்பிரசாதம்… கரண்ட் பில் இவ்ளோ மிச்சம் ஆகுமா?

இந்த தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கும் எரிசக்தி சேமிப்பு அமெரிக்காவில் ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை அகற்றக்கூடும் என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

இந்த தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கும் எரிசக்தி சேமிப்பு அமெரிக்காவில் ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை அகற்றக்கூடும் என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Heat Weather

Cool Roofs technology

கூல் ரூஃப் (Cool Roofs), இந்தியாவின் காலநிலைக்கு மிகவும் பொருத்தமான ஒரு பசுமை கட்டிட தொழில்நுட்பம். குறைவான செலவில் அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒரு சிறந்த தீர்வாக இது விளங்குகிறது. இருந்தும், இந்தத் தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Advertisment

கூல் ரூஃப்

இந்த பெயரிலேயே இதற்கான விளக்கம் ஒளிந்துள்ளது. கூல் ரூஃப், கட்டிடத்தின் மேல் போர்வை போர்த்தியது போல, உட்புற வெப்பம் அதிகரிப்பதை கணிசமாக குறைக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு வெயில் நாளில் கருப்பு மற்றும் வெள்ளை நிற டி-ஷர்ட்களை அணிந்தால், வெள்ளை நிற டி-ஷர்ட் அதிக சூரிய ஒளியை பிரதிபலித்து உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். அதேபோல், கூல் ரூஃப் கட்டிடத்தின் உட்புற வெப்பநிலையை குறைவாக பராமரிக்க உதவுகின்றன.

தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) ஆய்வின்படி, கூல் ரூஃப் தொழில்நுட்பம், ஏர் கண்டீஷனர் எரிசக்தி நுகர்வை 20% வரை குறைக்கலாம். இந்த தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கும் எரிசக்தி சேமிப்பு அமெரிக்காவில் ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை அகற்றக்கூடும் என்றும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இது 300 மில்லியன் கார்களை சாலையில் இருந்து அகற்றுவதற்குச் சமம்!

Advertisment
Advertisements

ஒரு கூரையின் "குளிர்ச்சி"யை தீர்மானிக்கும் முக்கிய பண்புகள் இரண்டு:

சூரிய ஒளி பிரதிபலிப்பு (Solar Reflectance): இது கூரையின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் எவ்வளவு பகுதியை பிரதிபலிக்கிறது என்பதைக் குறிக்கிறது. இதன் அளவு 0 முதல் 1 வரை இருக்கும். 1 என்பது 100% பிரதிபலிப்பை குறிக்கிறது.

வெப்ப உமிழ்வு (Thermal Emittance): இது கூரை உறிஞ்சிய வெப்பத்தை எவ்வளவு திறமையாக வெளியேற்றுகிறது என்பதைக் குறிக்கிறது. இதன் அளவும் 0 முதல் 1 வரை இருக்கும். 1 என்பது 100% வெப்பத்தை வெளியிடும் திறனைக் குறிக்கிறது.

இந்த இரண்டு பண்புகளும் அதிகமாக இருக்கும்போது, கூரை குறைவான வெப்பத்தை உறிஞ்சி, உறிஞ்சிய வெப்பத்தையும் விரைவாக வெளியேற்றும். இதனால், கட்டிடத்தின் உட்புறம் குளிர்ச்சியாக இருக்கும். 

கூல் ரூஃப் நன்மைகள்

ஏர் கண்டிஷனர் இல்லாத கட்டிடங்களில் வெப்பம் குறைந்து, வசதியான சூழல் நிலவும்.

ஏர் கண்டிஷனர் உள்ள கட்டிடங்களில், ஏசி-யின் வேலைப்பளு குறைவதால் மின்சார பயன்பாடு குறைகிறது.

மின்சார பயன்பாடு குறைவதால், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் கார்பன் அளவும் குறைகிறது.

அதிக வெப்பம் கூரையின் பொருட்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. கூல் ரூஃப் இந்த வெப்பத்தை குறைப்பதால் கூரையின் ஆயுட்காலம் நீடிக்கிறது.

நகரங்களில் கட்டிடங்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால் ஏற்படும் வெப்பத் தீவு விளைவை (urban heat island effect) கூல் ரூஃப் குறைக்க உதவுகின்றன.

பலவிதமான கூல் ரூஃப் தொழில்நுட்பங்கள் உள்ளன. சுற்றுச்சூழலுக்கும், உங்கள் பர்சுக்கும் நன்மை பயக்கும் இந்த கூல் ரூஃப் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம். வெப்பத்தை விரட்டி, உங்கள் கட்டிடத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இது ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழி!

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: