அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ட்ரிப்: மதுரையை சுற்றி உள்ள குளுகுளு இடங்கள்!

தமிழ்நாட்டில் "அக்னி நட்சத்திரம்" தொடங்கியிருப்பதால் குளுகுளு இடங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், மதுரையைச் சுற்றி உள்ள குளிர்ச்சியான பகுதிகள் என்னென்ன? எப்படி செல்வது? என்று இந்தப் பதிவில் காணலாம்.

தமிழ்நாட்டில் "அக்னி நட்சத்திரம்" தொடங்கியிருப்பதால் குளுகுளு இடங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில், மதுரையைச் சுற்றி உள்ள குளிர்ச்சியான பகுதிகள் என்னென்ன? எப்படி செல்வது? என்று இந்தப் பதிவில் காணலாம்.

author-image
Meenakshi Sundaram S
New Update
Madurai summer

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ட்ரிப்: மதுரையை சுற்றி உள்ள குளுகுளு இடங்கள்!

மதுரை மக்களே, அடிக்கிற வெயிலுக்கு ட்ராவல் பண்ணி இயற்கை சூழ்ந்த இடத்தில் இருக்கக்கூடிய அருவியில போய் நல்லா குளிச்சா எப்படி இருக்கும்? சொல்லும்போதே இப்பயே ஏதாச்சு ஒரு ஸ்பாட்டுக்கு போகணும் அப்படின்னு தோணுதா? அப்படி தோணுச்சுன்னா!

Advertisment

சித்தாதிபுரம் அணைக்கட்டு:

மதுரையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள சோழவந்தான் குருவித்துறை கிராமத்துக்குட்பட்ட சித்தாதிபுரம்  அருவின்னு சொல்லக்கூடிய அணைக்கட்டுக்குத் தான் போக வேண்டும். இந்த அணைக்கட்டு கடந்த சில மாதங்களாக டூரிஸ்ட் பாட்டா மாறிட்டு வருது. குறிப்பா வீக்கெண்டுல மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அதாவது, தென்னை மரம் பனைமரம் போன்ற இயற்கை சார்ந்த பகுதியில் அணைக்கட்டிலிருந்து வரும் தண்ணீரின் சத்தத்தை கேட்கும்போது ரம்மியமாக இருக்கும். இந்த அணைக்கட்டில் ஆழம் அதிகமாக இல்லாத காரணத்தினால் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை என அனைவருமே என்ஜாய் பண்ணி குளிக்க முடியும். மேலும் கடந்தசில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், ஒருபக்கம் கோடை விடுமுறையும் விடப்பட்ட காரணத்தினால் குடும்பத்துடன் எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் இயற்கை எழில் சூழ்ந்த இந்த அணைக்கட்டு பகுதிக்கு சென்று வரலாம்.!

புல்லாவெளி:

Advertisment
Advertisements

மதுரையில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் அழகிய கிராமமான தாண்டிக்குடியில் புல்லாவெளி அழகிய அருவி. திண்டுக்கல்லில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து காலை உணவுக்குப் பின் பயணத்தை தொடங்கினால்போதும், அடுத்த ஒன்றரைமணி நேரத்தில் அருவியை அடைந்துவிடலாம். மதுரையில் இருந்து மணலூர் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 44, செம்பட்டி ரோடு வழியாக சென்றால் புல்லாவெளி அருவி வந்துவிடும். செல்லும் வழியில் நிறைய அழகான சின்ன சின்ன கிராமங்களும் வியூபாயின்ட்களும் உள்ளன. அவற்றை மிஸ் பண்ணாமல் பார்த்துவிட்டே செல்லுங்கள். எங்கு பார்த்தாலும் பசுமை, சுற்றிலும் இதமான வானிலை, குளிர்ச்சியான நீர் என புல்லாவெளி நீர்வீழ்ச்சி மிக ரம்மியமாக இருக்கும்.

மெயின் நீர்வீழ்ச்சிக்கு நீங்கள் செய்ய வேண்டிய நடைபயணம் சற்று கரடு முரடாகவே இருக்கும். எனவே, மிகவும் கவனத்துடன் செல்வது அவசியம். புல்லாவெளி நீர்வீழ்ச்சி எந்த அளவிற்கு அழகாக இருக்கிறதோ அதே அளவிற்கு அபாயகரமானதும் கூட. நீர்வரத்து அதிகம் உள்ள இடம், வழுக்கும் பாறைகள் இங்கு எல்லாம் செல்ல வேண்டாம். மேலும் வழுக்காத செருப்புகள், மாற்றுத்துணி, டவல், குடிநீர், தின்பண்டம் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

குட்லாடம்பட்டி அருவி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குட்லாடம்பட்டி அருவி. நீர்வீழ்ச்சி என்றதும் நம் நினைவுக்கு வருவது குற்றாலம்தான். தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம்போல் மதுரைக்கு அருகேயும் ஒரு நீர்வீழ்ச்சி உள்ளது.

சோழவந்தான் கிராமத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி நீர்வீழ்ச்சி மதுரையின் ஒரு சிறந்த சுற்றுலாதலமாகவே மாறி வருகிறது. இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழ்நாடு வனத்துறையால் இயக்கப்படும் சிறுமலை ரிசர்வ் வனப்பகுதியின் ஒரு பகுதியாகும். அடர்ந்த காட்டுக்கு நடுவே அருவியின் தண்ணீர் சத்தம், இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே அருவியின் ஓரத்தில் அமர்ந்து சூழலை நன்றாக அனுபவிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். ரூ.10 அனுமதி கட்டணம் வசூலிக்கப்படும். செலவே இல்லாமல் குடும்பத்தினர், நண்பர்களுடன் சென்று ஒரு நிறைவான குளியல் போட்டு வர மிகவும் ஏற்ற இடம் இது. இங்கு தனியார் வாகனங்களில் மட்டுமல்லாமல், பேருந்து, ஷேர் ஆட்டோக்களிலும் செல்லலாம்.

குற்றாலம்:

மதுரையில் இருந்து 166 கி.மீ தொலைவில் உள்ள குற்றாலம் அருவிகளுக்கு சென்று ஒரு குளியல் போடலாம். குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, பாலருவி, உள்ளிட்ட அருவிகளும், குண்டாறு அணை, அடவிநயினார் அணை, அகத்தியர் அருவி, கும்பவுருட்டி நீர்வீச்சி, காரையாறு அணை, மணிமுத்தாறு அணை மற்றும் நீர்வீழ்ச்சி என பல இடங்களுக்கும் சென்று குளிர்ச்சியாக திரும்பலாம்..

வைகை அணை:

மதுரையிலிருந்து வடமேற்கே சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டிக்கு அருகில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அணையில் 7 மதகுகள் உள்ளன. ஒவ்வொரு மதகும் 12 மீ. உயரமும் 5 மீ. அகலமும் கொண்டது. வைகை அணை அதன் அழகிய சுற்றுப்புறத்தின் காரணமாக ஒரு பிரபலமான சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. அணையின் இருபுறமும் சிறிய பிருந்தாவனம் என்ற அழகிய பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. 

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி கொடைக்கானல், மதுரையில் இருந்து 120 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சில்லென்ற சீதோசஷனம், மனதை கவரும் சூழல், இயற்கை காட்சிகள் கொண்ட கொடைக்கானலில் சுற்றிப்பார்க்க நட்சத்திர ஏரி, குணா குகை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரயண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் மரக்காடுகள், பில்லர் ராக்ஸ், வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, மன்னவனூர் பூங்கா, செட்டியார் பூங்கா, டால்ஃபின் நோஸ், பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், குறிஞ்சி ஆண்டவர் கோவில், பழனி வியூ பாயிண்ட் என ஏராளமான இடங்கள் உள்ளன. நட்சத்திர ஏரியில் படகு சவாரி செல்வது, குதிரையேற்றம், சைக்கிள் சவாரி போவது புத்தணர்வை தரும். பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல பல தங்குமிடங்கள் உள்ளன. மதுரையில் இருந்து பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து வருவதென்றால் கொடை ரோடு ரயில் நிலையத்தில் இறங்கி கார் (அ) பேருந்தில் கொடைக்கானல் செல்லலாம்.

Madurai summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: