உடற்தகுதிக்கான கூப்பர் டெஸ்ட்டை (Cooper Test) நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
இது இதய தகுதியை மதிப்பிடுவதற்கான எளிய ஒரு பயனுள்ள வழியாகும், இது ஆரம்பத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது, ஆனால் இப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. என்று டாக்டர் ரசித் சக்சேனா கூறினார். (senior consultant, cardiac surgery, NH Gurugram)
12 நிமிடங்களில் முடிந்தவரை ஓடுவது அல்லது நடப்பது இதில் அடங்கும், இந்த நேரத்தில் கடந்து செல்லும் தூரம், உங்கள் ஏரோபிக் திறனைக் காட்டுகிறது, இது உடல் செயல்பாடுகளின் போது உங்கள் உடல் ஆக்ஸிஜனை எவ்வளவு திறமையாக பயன்படுத்துகிறது என்பதை அளவிடுகிறது.
2.5 கிலோமீட்டர் பெஞ்ச்மார்க் செட் செய்வதன் மூலம், பயிற்சியாளர்கள் ஒரு தடகள வீரரின் உடற்தகுதி அளவை மதிப்பீடு செய்யலாம், மேலும் அவர்களின் விளையாட்டுக்கு அவர்கள் தயார்நிலை குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்கலாம்.
இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதற்கான ஒரு விலைமதிப்பற்ற சோதனை, ஏனெனில் இது இரு அமைப்புகளிலும் கட்டுப்படுத்தப்பட்ட தேவையை அளிக்கிறது. இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டும், மேலும் நுரையீரல் அதிக ஆக்ஸிஜனை வழங்க வேண்டும், என்று டாக்டர் சக்சேனா கூறினார்.
கார்டியோவாஸ்குலர் செயல்பாட்டில் கூப்பர் டெஸ்ட் கவனம் செலுத்துவதால், போதிய உடற்பயிற்சி நிலைகள் காரணமாக காயம் அல்லது குறைவான செயல்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களைக் கண்டறிவதற்கான ஒரு முக்கிய கருவியாக இது உள்ளது.
கூப்பர் டெஸ்டில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பொதுவாக சிறந்த இதய ஆரோக்கியம், இதய நோய்களின் அபாயம் குறைதல் மற்றும் ஒட்டுமொத்த மேம்பட்ட ஆற்றல் உள்ளது. ஃபிட்னெஸ் புரொகிராம் தொடங்கும் அல்லது காலப்போக்கில் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் எவருக்கும் இது ஒரு சிறந்த அடிப்படை நடவடிக்கையாகும். தங்கள் இருதய ஆரோக்கியத்தை அளவிட ஆர்வமுள்ள எவருக்கும் இது அவசியம் , என்று டாக்டர் சக்சேனா கூறினார்.
விளையாட்டு வீரர்கள், தங்கள் உடற்தகுதி அளவை அளவிடவும் மேம்படுத்தவும் இந்தச் சோதனையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இது அவர்களுக்கு மட்டும் அல்ல.
நல்ல ஆரோக்கியம் உள்ள எவருக்கும், குறிப்பாக இதயப் பிரச்சினைகளுக்கு அதிக ஆபத்தில் இருக்கும் நடுத்தர வயது வர்க்கத்தினருக்கு இதைப் பரிந்துரைக்கிறேன். சாத்தியமான இருதய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான சிறந்த கருவியாகும். கூப்பர் டெஸ்ட் நன்மைகள் இதயத்திற்கு அப்பாற்பட்டவை. நுரையீரல்கள், அதிகரித்த ஆக்ஸிஜன் தேவைகளுக்கு ஏற்றவாறு, குறிப்பிடத்தக்க வகையில் பயனடைகின்றன, மேலும் சுவாசத் திறனை அதிகரிக்கின்றன, என்று டாக்டர் சக்சேனா கூறினார்.
கூடுதலாக, கடினமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தசைகள், குறிப்பாக கால்களில், வலுவாகவும் திறமையாகவும் வளரும்.
உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் கூப்பர் டெஸ்டை இணைத்துக்கொள்வது உங்கள் இதய மற்றும் தசை ஆரோக்கியத்தைப் பற்றிய விரிவான பார்வையை வழங்குகிறது, சுறுசுறுப்பாக இருக்கவும் இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்கவும் உங்களை ஊக்குவிக்கிறது.
இருப்பினும், அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், பரிசோதனையை முயற்சிக்கும் முன் ஒரு நிபுணரை அணுகவும், என்று டாக்டர் சக்சேனா பகிர்ந்து கொண்டார்.
Read in English: Assess your physical (and cardiovascular) fitness in just 12 minutes; here’s how
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.